Wednesday, April 2, 2008

மலை

எழுதியவர்______________________
--------------------------கருணாகரன்

------------------------------------------------------



இந்த மலையில் எங்கோ ஒளிந்திருக்கிறது

ஒரு சிற்பம்

ஒரு ஊற்று

ஒரு தெய்வக்கல்

உள்ளுறைந்த மௌனமும் இசையும்



என்றபோதும்

மலையை யாரும் வணங்குவதில்லை

அது காலடியில் நசிகிறது

பணிந்து



சிறு கல்

மலையாகிறது வணக்கத்தில்



அச்சிறுகல்லில்

ஊற்றில்லாதபோதும்

இசையும் மௌனமும் இல்லாதிருக்கையிலும்

அதுவே மலையின் கருவறையாகிறது
-------------------------------------------------

1 comment:

ப. அருள்நேசன் said...

வணக்கம் அண்ண
முதன் முதல் உங்கள் தளத்திற்கு வருகிறேன்
நல்ல கவிதை, கல் என்றவுடன் மனசில் நிறைகிற இறுக்கம்
அதில்கசியும் நதியில் தளர்வது போல இலேசாகவிருந்தது
வாள்த்துக்கள் அண்ண.