குழந்தையின் குரல்
தத்தளிக்கும்
ஒரு குழந்தையின் குரல்
திருவிழாவிலிருந்து விலகிவிட்டது
கூட்டத்தில் நசிபடாமல்
அந்தரிப்போடும் துயரின் கனதியோடும்
அது பெருகிப் பரவுகிறது எங்கும்
அப்படியே
திருவிழாவைத்தீண்டி
அதன் மேல் விசமாகப்பரவி
தன்னை எழுப்பி விடுகிறது
மாபெரும் துயரொலியாய்
அப்பெரும் கொண்டாட்டத்தில்
குழந்தையின் குரலில் மிதக்கும்
தத்தளிப்பை
திருவிழா பகிர்ந்தளித்தது
ஒவ்வொருவரிடமும்
தத்தளிக்கும் குழந்தைக்குரலை
எடுத்துச் சென்றனர்
ஒவ்வொருவரும்
இன்னும்
தத்தளிப்பை குழந்தையிடமே மிஞ்சவிட்டு.
00
பொம்மையின் ஞாபகம்
வாசலைத் திறந்து
செல்ல முடியாத
பொம்மை
எல்லோரும்
வெளியேறிச் சென்றபின்
தனித்திருக்கிறது
குழந்தையின் ஞாபகங்களுடன்
00
.jpg)

No comments:
Post a Comment