
‘புண்ணைத் தோண்டுவதைக் குறித்து என்ன சொல்கிறீர்?’’என்ற ஆசிரியர் கேட்டார்
கூடவே மருந்து போடுதைப் பற்றியும்.
மேலும் அவர் கேட்டார்,
‘‘வளராத மரத்துக்கு நீரூற்றுவதைப் பற்றி விளக்குக.
அமைதியை நோக்கிச் செல்லும் போதுமுரண்பாட்டை வளர்க்கலாமா?
முரண்பாட்டை வளர்த்துக் கொண்டேஅமைதிக்குச் செல்லலாமா’’ எனவும்.
பகைமையைக் கூர்மைப்படுத்தும்
உபாயங்களுக்குக் கீழும் மேலும்
இரத்தவெடிலே எப்போதுமிருக்கும் என்றவரலாற்றுப்
பாடங்களைப் படிக்கத்தவறிய மாணவரிடம்
மேலும் அவர் வினவினார்,
‘‘அமைதிக்கு எதிரானதல்லவா பகைமையின் கூர்வாள்?’’ என.
‘‘சனங்களைக் கருவிகளாக்கித் ‘தம்மை’ வளப்படுத்தும்
தந்திரங்களைக் குறித்தும்,
கட்சிகளையும் தலைவர்களையும்
சனங்கள் கருவிகளாக்கிக் கையாள்வதைக் குறித்தும் விளக்குக’’ என்றும்.
மேலும்,
‘‘நூற்றாண்டுப் பெருமிதக் குடைகளுக்குக் கீழே,
கையேந்தும் மக்களின் அவலக்குரல்களுக்கும்
‘தகைசார் மேன்மைகொண்டோரின்’ தன்மானப் பேச்சொலிகளுக்கும்
இடையில்மறைந்திருக்கும் உண்மையையும் பொய்யையும் கண்டறிக’’ எனவும் கேட்டார் அவர்.
‘‘அவமானத்தை எதிர்கொள்ளத் திராணியற்ற மனம்
குற்றவுணர்வுடன் ரகசியமாக இருப்பதை விரும்புதற்கும்,
அந்த ரகசியத்தில்
மோசமான குற்றங்கள் பேசப்படாமல் மறைக்கப்படுவதற்கும் உள்ள
நோக்கங்களைப் பற்றிச்சொல்க’’ என்ற ஆசிரியர்,
‘‘அபிமானங்களையும் விசுவாசங்களையும்
அனுதாபங்களையும் விலக்க முடியாப் பேராளர்கள்
தங்களிடத்தில் வைத்திருக்கும்
புனைவுகளைப் பெருக்கும் கருவிகளையெல்லாம்
எங்ஙனம் கைவிடப்பண்ணுவது’’ என்றும்.
அந்தக் கருவிகளால் மனத்தையும் மூளையையும்
சிதைக்கப்பட்டவர்களைக் குறித்தும் கேட்டார் ஆசிரியர்.
‘‘வளராத மரம்’ என்றும் காய்த்ததும் இல்லைப் பூத்ததுமில்லை,
காற்று வீசி யது அசைந்ததுமில்லை - என்றும்
யாருக்கும் நிழல் தந்ததுமில்லை யொரு
குருவிக்குக்கூட அது இடமளித்ததில்லையே’ என்றவர்
‘‘பெருமைக்கது பூச்சாடியில் நிற்கலாம், மரமென்று அறிவீரோ’’ என்றார்.
இன்னும்
‘‘மரமென்றால் என்ன?’’ என்றும்.
00
No comments:
Post a Comment