Tuesday, January 3, 2012

சாதுர்யை 2












போனதடி ஒரு பகல் பொல்லாத நாளாய்
உன்னிடமிருந்து திரும்பி வருகையில்
கடல் கொந்தளித்துக் காற்றில் மோதியது
முறிந்த மலர்களிலிருந்த
சிதறிய மலர்கள்
நமது பகலின் அடையாளம்

சூரியன் வானத்திலிருந்ததா
கீழே வீழ்ந்து சிதறியதா
எதுவும் தெரியவில்லை
வீதியில் நீ பறித்த குழிகள் ஆயிரம் ஆயிரம்

அது விடை பெறாத தருணம்
நீ என்னைத் தோற்கடித்த தருணம்
நானும் நீயும் பகைவர்களல்லவே
ஆனால் நீ என்னைத் தோற்கடித்தாய்
மனங்கொத்தியே மனங்கொத்தியே
தோழமை என்பது என்ன

நட்பாயிருத்தலின் அர்த்தம்தானென்ன

இன்றறிந்தேன் ஒன்றை
தடைகளைக் கடக்க முடியாமற் தானுள்ளாய் நீயும்
இன்னும்
இன்னும்

அழகிகள் வீரிகளாவதெப்போது
வீரிகளே அழகிகள் என்ற என்னுலகத்தில்

No comments: