
காலையில் குதித்தோடும் மஞ்சள் நதி
மாலையில் வட்டமிடும் வெள்ளைப்புறா
நேற்று வாசனை மிகுந்த செம்மலர்
சிலபோது காடெல்லாம் ஒரு கொடியாகிய
பச்சைத்தேவதை
அடி சின்னப்பெண்ணே
இதுவென்ன வானவிற் காலமா
இந்தக் கோடையில்
குளிரும் கலர்ப்பழமாகி
தினமும் வருகிறாய் என் அறைக்கு
ஒருவன் சொல்கிறான்
நீ வானவில் என்று
இன்னொருவன் சொல்கிறான்
நீ வண்ணத்துப் பூச்சியென்று
நான் சொல்கிறேன்
நீ கோடையில் விளைந்த குளிர்ப்பழம் என்று
அடி எங்கள் சின்னப் பெண்ணே
எதில் நீ இருக்கிறாய்
அதில் நீ எப்படி இருக்கிறாய்?
00
No comments:
Post a Comment