Friday, May 11, 2012

ஞாபகங்களும் கனவும்































கந்தன் டேவிற் கலா வுடனான உரையாடல்  


உரையாடியவர் -
அரியகுட்டி முபாரக்  
நாற்பத்தியாறு கவிதைகளை மட்டும் எழுதி மூன்று கவிதைத் தொகுதிகளில் அவற்றை வெளியிட்டிருக்கிறார் கந்தன் டேவிற் கலா.    
உதிரும் கடல் 
காயப்பட்ட வெயில்    
புல்வெளியில் அசையும் கத்தியின் நிழல்   
என மூன்று கவிதைத் தொகுதிகளையும் ஒரே நாளில் வெளியிட்டிருக்கிறார் அவர்.

இதைவிடவும்  

நோக்காடு
பூனை என்ற பூனை  
என்று இரண்டு சிறுகதைத்தொகுப்புகளையும்

தோற்றுப்போன நக்கீரன் 
காடுகளின் மீது தீ   
சொல்ல முடியாத வார்த்தைகளின் குவியல்    
எதுவுமில்லை, ஆனால் சில  
ஆகிய விமர்சன நூல்களும்

நண்பர்கள் பகைவர்கள்
என்ற கட்டுரைத்தொகுப்பையும் கடேக வெளியிட்டிருக்கிறார். ஆனால் இவற்றில் அவரை அதிகமான சர்ச்சைக்குள்ளாகியவை அவருடைய கவிதைகளும் நண்பர்கள் பகைவர்கள் கட்டுரைத் தொகுப்பும் தோற்றுப்போன நக்கீரன் விமர்சன நூலுமே.அதிலும் தோற்றுப்போன நக்கீரன் தமிழ்ச் சூழலை கடுங்கேள்விக்குள்ளாக்கியதால் அந்த நூல் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. அதேயளவுக்கு அது கடுமையான எதிர்ப்பையும் சந்தித்தது. இவ்வளவுக்கும் அது ஒன்றும் அதிக விமரினத்தையோ தீவிர கருத்தாடலையோ கொண்டிருக்கவில்லை என்றும் அப்படியான விமரிசனங்களை எதிர் கொள்ளும் திராணியை தமிழ்ச்சூழல் பெற்றிரக்கவில்லை என்றும் கந்தன் டேவிற் கலா சொல்கிறார்.

தமிழில் செழிப்பான விமர்சன மரபொன்று இருந்ததாகவும் அந்த விமர்சன மரபில் கடவுளையே கேள்வி கேட்கக்கூடிய இடமிருந்ததாகவும் சொல்கிற தமிழ்ச்சூழலில் இப்போது யாரும் விமர்சனங்களை முன்வைக்கமுடியாத   நிலைதானுண்டு.

இது தமிழ் வாழ்வை முடக்கும் நிலை. தமிழர்கள் மிகமிகப்பின்தங்கியே இரக்கப்போகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. வளர்ச்சியை விமரிசனமே ஏற்படுத்துகிறது. பன்முகச்சிந்தனையையும் சுதந்திர வெளியையும் ஆளுமையையும் விமரிசனமே உருவாக்குகிறது. விமரிசனம் ஜனநாயகத்தின் பேறு. அதுவே மக்களின் விடுதலைக்கான தளம். அதுவே ஒடுக்கப்பட்ட மக்களையும் அதிகார வர்க்கத்தையும் சமநிலைப்படுத்துகிறது. பரஸ்பரத்தையும் பகிர்வையும் அதுவே ஏற்படுத்துகிறது. நம்பிக்கையையும் எதிர்காலம்பற்றிய எண்ண விரிவையும் அதுதான் தருகிறது.

ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாகவே பொதுவான தமிழ்ச்சூழல் இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே இதுதான் முழுத்தமிழ்ச்சூழலின் நிலையும் என்று அந்தப்புத்தகம் விவாதத்தைக்கிளப்புகிறது.

ஒருவர் அல்லது பலர் முப்பது நாற்பது வருசமாக எழுதிய கவிதைகளை ஒரு புத்தகத்தில் ஒரே நாளில் வாசிக்கலாம் என்றால் ஏன் ஒன்பது வருசங்களாக எழுதிய கவிதைகளை ஒரே நாளில் வெளியிடக்கூடாது என்று கேட்டார் கந்தன் டேவிற் கலா. 
அதுவும் மூன்று நூல்களாக.

நாற்பத்தியாறு கவிதைகளையம் ஏன் ஒரு தொகுதியில் வெளியிடவில்லை என்று கேட்டேன்.

' ஏன் ஒரே தொகுதியில் வெளியிட வேண்டும்' என்று திருப்பிக் கேட்டார் க.டே.க.

அவற்றின் தன்மைகள் அவசியம் பொறுத்தே அவை அப்படி வெளியிடப்பட்டிருக்கின்றன. தவிர, ஏன் மூன்று தொகுதிகளில் வெளியிட்டால் என்ன ' என்றுமவர் தொடர்ந்து கேட்கிறார்.

இருபத்தெட்டு காதற் கவிதைகள், நாற்பத்தியொரு அரசியற் கவிதைகள், பத்தொன்பது தலித் கவிதைகள், பதினேழு பெண்ணியக் கவிதைகள், முப்பத்தியாறு அகதிக்கவிதைகள், சூழலியல் பற்றிய பதின்னான்கு கவிதைகள், பன்னிரண்டு சர்ரியலிசக் கவிதைகள், இருபத்தொன்பது இருத்தலியற் கவிதைகள், எட்டு அந்நியமாதற் கவிதைகள் என இதுவரையில் கந்தன் டேவிற் கலா இருநாற்று நான்கு கவிதைகளை எழுதியுள்ளதாக விமர்சகர்களின கணக்குகள் சொல்கின்றன.

இந்தத்தொகை அவருடைய கவிதைகளைப்பற்றி விமர்சகர்கள் கூறியவை. இதைவிட இன்னும் கூடுதலான தொகையை வேறுவிமர்சகர்கள் கண்டு பிடித்திடவும் கூடும். ஆனால் தான் இதுவரையில் நாற்பத்தியொன்பது கவிதைகளை மட்டுமே எழுதியுள்ளதாகச் சொல்லி அவற்றைக் காட்டி சாட்சிப்படுத்தினார் அவர்.

அதெப்படிக்கணக்கு வேறுபடுகிறதேயென்று க.டே.க விடம் கேட்டேன்.
அவரவர் விருப்பம், தேர்வு, ரசனை, அரசியல், நோக்கு, அடையாளங்காணல் என்பவற்றைப்பொறுத்து அவர்கள் கவிதைகளை அடையாளம் காணுகிறார்கள். அப்படியே அவர்கள் கவிதைகளை வகைப்படுத்துகிறார்கள். அதன்படியே பிரிக்கிறார்கள் என்கிறார் கந்தன் டேவிற் கலா.
இதற்கிடையில் அவர் எழுதியுள்ள நாற்பத்தொன்பது கவிதைகளில் மூன்று கவிதைகளை எந்தத் தொகுதியிலும் சேர்க்கவில்லை. அவற்றை அவர் தவிர்த்து விட்டார்.

ஏன் அந்தக்கவிதைகள் மூன்றும் தவிர்க்கப்பட்டன என்ற அவரிடம் கேட்டேன். அவை இப்போது பொருந்தா ஒளியுடையவை என்றார்.  

பொருந்தா ஒளியென்று அவர் சொன்னது அதிக பவருடைய ஒளியைப்பார்ப்பதற்கு சாதாரணமான கண்ணால் முடியாது. ஹை பவரைப்பார்ப்பதற்கென்று ஒரு சாதனம் வேண்டும். அதுவரையில் அந்தக்கவிதையை தள்ளிவைத்துள்ளதாகச் சொல்கிறார்.

சரி, மேற்கோண்டு சொல்லுங்கள் என்றேன்.

' அவரவர் விருப்பம், தேர்வு, ரசனை, அரசியல், நோக்கம், தேவை என்பவற்றைப் பொறுத்து அவர்கள் கவிதைகளை அடையாளம் காணுகிறார்கள்.  அதன்படியே அவர்கள் கவிதைகளை வகைப்படுத்துகிறார்கள். அப்படியே கவிதைகளைப்பிரித்தும் விடுகிறார்கள்.

ஆனால் கவிதையை புரிந்து கொள்ளுதலிலுள்ள பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அது தீரப்போவதுமில்லை. கவிதையை அணுகுவதிலேயே   பிரச்சினைகளிருக்கின்றன. கவிதை பன்நிலைப்பட்டது. இது வடிவத்திலுமுண்டு. பொருளிலுமுண்டு. வெளிப்பாட்டிலுமிருக்கிறது. '
ஒரு கவிதையின் அனுபவத்தையும் அதன் நுட்பத்தையும் அறிவதிலும் நெருங்குவதிலும் ஒவ்வொருவருக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. ஆளுக்காள் அவரவர் தன்மைகளிலும் அனுபவங்களிலும் கோணங்களிலும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். மாறுபடலாம்.

எந்தக்கவிதையையும் அவரவர் தங்கள் அனுபுவங்களின் வழியாகவும் தளங்களின் ஊடாகவுமே அணுகுகிறாhர்கள். அப்படியே அடையாளம் காணுகிறாhர்கள்.   அப்படிக்காண்கிற அடையாளம் பல  சந்தர்ப்பங்களிலும் கவிஞரைப் பாதிக்கிறது. கவிதையையும்  பாதிக்கிறது. இதில் கவிஞருக்கு எந்தச் சம்மந்தமுமில்லை. ஆனால் இந்த அடையாளப்படுத்தல்களின் விளைவுகளுக்குக் கவிஞர் பொறுப்பாக வேண்டியிருக்க்pறது. கவிதையும் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

பல சந்தர்ப்பங்களிலும் ஒரு கவிதையை வௌவேறாகப் புரிந்து கொள்ள முடியும். சில புரிதல்கள் கவிஞனை அபத்தமாகக் காட்டியும் விடுகின்றன. அப்படியொரு அபத்த நிலையுருவாகும்போதுதான் கவிஞன் பெருந்துன்பத்தில் வீழ்த்தப்படுகிறான். அவனுடைய கவிதைகளே அவனைத்தண்டனைக்குட்படுத்தும் படியாகின்றன. ஆனால, கவிதைகள் அவனைத்தாக்கும் கருவியாக வில்லை.

கவிதையைப்பரிந்து கொள்வோரின் பிழை மனம் கவிதைகளில் மள்ளை ஏற்றி விசத்தை ஊற்றி அவனுக்கே அந்தப்பண்டத்தை ஊட்டி விடுகிறது. கிவிஞன் எந்தச்சம்மந்தமுமில்லாமல் பழி வாங்கப்படுகின்ற கொடுமையின் அபத்தம் உருவாகும் விதத்தைப்பார்த்தீர்களா என்று சொல்லிக் கொண்டே போகிறார் கலா.

கந்தன் டேவிற் கலா முற்றிலும் வேறான அடையாளத்தைக் கோருகிறார். இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அவர் சாதாரண மனிதனாக வாழ்வதற்குரிய வெளியை இயல்பாக விரும்புகிறார்;. அதற்காக அவர் தன்னை வெளிப்படையாக வைத்திருக்கிறார். வெளிப்படை என்பது சுதந்திரமானது என்பதால் தான் அப்படி இருக்கிறென். அதிலிருக்கும் சுகத்தை இழக்க முடியாது. எந்த வளையங்களும் அதிலில்லை. அதில் எழுச்சியுமில்லை, வீழ்ச்சியுமில்லை. தேய்மானங்களுமில்லை என்கிறார் அவர்.

புலன்கள் மங்கிய சமூகமாக தமிழ்ச்சமூகமிருப்பதால் எதையும் புரிந்து கொள்வதற்கு அது நிறையவும் சிரமப்படுகிறது. நுண்ணுணர்வை அது இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மந்தைத்தனத்தை அது விட்டுவிடத்தயாரில்லை. இதுதான் அதன் பெருங்குறைபாடு.  பாரம்பரியம், மரபு, வழமை என்ற சொல்லாடல்களுக்குள் அது தன்னைக் கட்டிவைத்திருக்கிறது. நவீனத்தைக் கண்டு அது பேதலிக்கிறது. இத்தகைய அபத்தம் உலகமயமாகிய சூழலில் பெரும் பிரச்சினைகளை தமிழ்ச்சமூகத்துக்கு கொண்டு வருகிறது.
பொதுவாக தன்னை அறியும் நிலையை தமிழ் வாழ்;க்கை கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது. அதன் பிறகு அது இன்னும் தன்னுடைய நிலைமையையே மதிப்பிடவில்லை. இந்த கணக்கிடாமை என்பது சுயபரிசோதனை இல்லாத நிலையின் தொடர்ச்சிதான். சுயபரிசோதனை மட்டுமல்ல பரிசோதனை முயற்சிகளே அதற்கு ஒவ்வாத குணங்களாகிவிட்டன.

இல்லையென்றால் அது நல்ல சினமாவையோ, புத்தி பூர்வமான அரசியலையோ, தேர்;ந்த இலக்கியத்தையோ, அறிவு ப+ர்வமான பண்பாட்டையோ, முன்னேற்றகரமான வாழ்க்கையையோ கண்டறியாமல் விட்டிருக்குமா. இந்தமாதிரியான முயற்சிகளுக்கு இதுவரையான தமிழ்ச்சமூகத்தின் அங்கீகாரமென்ன. பொதுவான தமிழர்களின் ரசனை மட்டம் ஏனிப்படித்தாழ்ந்து பொயிருக்கிறது. நீண்ட வாழ்வுத் தொடர்ச்சியுடைய ஒரு இனம் ஏன் இப்படி சகலவற்றிலும்   மிகப்பின்தங்கியிரக்கிறது.
இப்படிக் குமுறிக்கொண்டே போனார் க.டே.க.

புரிந்து கொள்ளல்தான் உலகின் முதற் பிரச்சினையும் பெரும் பிரச்சினையும். அறிவு என்பது புரிந்து கொள்ளலுக்கான, வழிகளைக்கண்டறிவதற்கான கருவியாக மாறியிருக்க வேணும். ஆனால் நடந்திருப்பது எதிர்மறையானது. அறிவு தவறான விளக்கங்களைக் கொள்ளும் வழிகளையே திறந்து விட்டிருக்கிறது.

அடிப்படையில் சந்தேகமும் தன் நோக்கமும் வளர்ந்திரக்கிற வாழ்க்கையில் எதனையும் கற்பிதங்க@டாகவே புரிந்த கொள்ளும் அறிவை வளர்ப்பதெ தவிர வேறென்ன செய்ய மடியும். உலகில் இந்தப்பிரச்சினைகள் தீர வாய்ப்பில்லை. பதிலாக இன்னுமின்னும் பிரச்சினைகள் உரவாகவே போகின்றன.

ஒவ்வொரு மனிதனும் தனது மிகப் பெரிய சேமிப்பாக காயங்களையே நிரப்பிக் கொள்கிறான். எல்லா விதமான வளங்களையும் விட காயங்களை வழங்குவதையே மனித குலம் இலக்காகக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன. பல சமயங்களிலும் நம்பிக்கையை நம்பிக்கைக்குரியவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அல்லது பலியிடப்படுகிறார்கள்.

நம்பிக்கையூட்டக்கூடியமாதிரி கவிதைகளை எழுதுங்கள், படைப்புகளை முன்வையுங்கள் என்ற வெண்டுதல், அல்லது கோஷங்கள் எந்த அளவுக்கு அறிவுத்தனமாகவும் உண்மையாகவும் மன்னிறுத்தப்படுகின்றன. சக மனிதனையே நம்ப முடியாத அளவுக்கு யதார்த்த மிருக்கும்போது எந்த நம்பிக்கை எப்படி ஏற்றுவது. பொய்யும் புனைவுமான கவிதை உருவாக்க முடியுமே தவிர மெய்யாக எழுத முடியாது. படைப்பிலும் வாழ்க்கையிலம் இரண்டகமிருக்க முடியாது. புனைனவின் டிப்படைகளுக்கு எதிரான வாழ்pன் அடிப்படைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கவிதையை வன்முறைக்கான ஆயுதமாக்குவதும் விடுவதும் கூட இப்படியானதொரு பின்புலத்திலும் இவ்வாறான நிலைமைகளிலும்தான் நிகழ்கின்றன. சொற்கள், அவற்றின் பொருளை விடவும் வௌ;வேறு   விளக்கங்களை அளிக்கும் போக்கு அதிகரித்துச் செல்கிறது. மொழி இன்னும் அப்படியே வரையறுக்கப்பட்ட விளக்க எல்லைகளுக்குள் நிற்க முடியாது. நமது மொழி  விரிய முடியாமல் தத்தளிப்பதாகவே நினைக்கிறென்.

ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பொருள் பின்னர் வரம் தலைமுறைகளின் அறிவ அனுபவம் ஆற்றல் போன்றவற்றால் சீராக்கப்படுகிறது. மேலும் முன்னேற்றகரமாக திருத்தியமைக்கப்படுகிறது. அதுதான் வளர்ச்சி. அதுதான் கூர்ப்பு. அதுதான் தலைமுறைகளின் பங்களிப்பு. அதில்தான் தலைமுறைகளின் கூட்டிணைவுண்டு.

தலைமுறைகள் என்றால் என்ன, அல்லது அவற்றில் யார் பங்கேற்கிறார்கள். தலைமுறை என்பது கூர்ப்பே. அதில் பங்கேற்போர் நமது வாரிசுகள்தான். பிள்ளைகளுக்காக பொருள் சேர்க்கும் தமிழ் வாழ்க்கை முறையில் பிள்ளைகள் பங்கேற்பதற்கான இடைவெளி இருப்பது குறைவு.

ஒரு வெளிநாட்டு நண்பர் தமிழர்களின் வாழ்க்கையைக்கவனித்த பின்னர் சொன்னார், தங்களுடைய பிள்ளைகளின் ஆற்றலில் தமிழ்ப் பெற்றோர்களுக்கு நம்பிக்கையில்லாதிருக்கிறது. அதனால் அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்காகவே வாழ்க்கை முழவதும் மாய்கிறார்கள்.

அவர்களை ஊட்டமாக வளரப்பதற்குப்பதில் அவர்கள் தங்கள் காலி நிற்பதற்குப்பதில் பெற்றொரின் உழைப்பிலே தங்கியிரக்க வைக்கப்படுகிறார்கள். இதில் தமிழ் மக்களுடைய தேச வழமைச்சட்டத்தை அவதானித்தால் அவர்களுடைய குறைபாடுகளைத் தெளிவாக விளங்கலாம்.
இதில் முக்கியமானது சொத்துக்களை கைமாற்றுதல், சொத்துரிமை பற்றியது.

இதில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் இருக்கிறபோதும் பொதுவாக சொத்துரிமையில் பெண்ணொடுக்குமுறைக்கான களம் திறந்திருக்கிறது. சீதனம் என்பது இதில் திரண்டு கட்டிபத்திப்போயிருக்கிறது.

சொத்துச் சேகரிப்பு மனோபாவத்தில் சாதிய அம்சங்களும் தாராளமாக உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் எதிர்மறை அம்சங்களுடையதாகவே தமிழர்களின் பிள்ளைப்பராமரிப்பு உள்ளது. பிள்ளைகளை சோக்கேஸ்க்குள் வைக்கும் இயல்பையே தமிழர்கள் பராமரிக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்குமாக காலம் விரிந்து கொண்டெயிருக்கிறது. அவரவர் அவரவர்களுடைய தளத்தில் இயங்கவேண்டியதுதானெ. இதில் ஒரவருடைய இயங்கு தளத்தை எப்படி இன்னொருவர் குறைதது விடமுடியும். தமிழர்களின் சொத்து சேகரிக்கும் மனோபாவந்தான் அவர்களை குறுகிய எல்லைக்கள் வரையறத்து மட்டுப்படுத்தியிருக்கிறது. அவர்கள் புதியன தேட வாய்ப்பில்லாமற்போனதற்கான காரணமாக இதையே கொள்ள வேண்டியிருக்கிறது.  
                                        
(தொடரும்)

00

No comments: