Monday, July 2, 2007

காணாமற்போனவனின் புன்னகை

------------------------------
எழுதியவர்- கருணாகரன்

-----------------------------------


ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்
காணாமற்போனவனின் புன்னகையை
கடந்துபோகமுடியாதபடி
கொதித்துக்கொண்டிருந்தது
தீத்துண்டாகஅந்தப்புன்னகை

அதில் காயாமலே இருந்தன
இரண்டு கண்ணீர்த்துளிகளும்
அவனுடைய குருதியும்

திரும்பிச்செல்லவும் முடியவில்லை
காணாமற்போனவனின்
புன்னகையை விட்டு
அங்கிருக்கவும் முடியாது

காயமறுக்கும் கண்ணீர்த்துளிகளின்
முன்னாலும்
குருதியின் அருகாமையிலும்.

-------------------------------------------------

No comments: