Monday, July 2, 2007

விலகல்

------------------------


எழுதியவர்- கருணாகரன்

-----------------------------------------------


இன்றும் நான் பேச நினைத்தேன்
வார்த்தைகள் சலிப்பூட்டின
ஒளி அதிக சங்கடத்தைத் தந்தபோது
வெளியே
சுவரினோரம்
நிழலும் இருளும் கலந்திருந்த
மறைவில் ஒதுங்கினேன்

உள்ளே
இசையின் உக்கிரமும்
நடனத்தின் ஆவேசமும்
சுவர்களிலும் நிழல்களிலும் பிரதிபலித்தன

யாரும்
என்னைக் கவனிக்கவில்லை


------------------------------------------------------

No comments: