------------------------
எழுதியவர் - கருணாகரன்
------------------------------
சவப்பெட்டியின் நிழலில்
துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் தூக்கத்தினூடும்விழிப்பினூடும்
ஞாபகங்கொள்ள முடியா
பூச்செடிகளில்யாரோ
விட்டுச் சென்ற
புன் சிரிப்பின்மீது
இரத்தத்துளிகளின்
நடனம்
பாம்பின் நளினத்தோடு
காதருகில்
அச்சமூட்டும்
எதிரி
அழைத்துச்சென்ற
விருந்தில்
எதிர்பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை
தலைகவிழ்ந்தபடியிருந்தார் கிறிஸ்து
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது
காலம்
பன்னூறு ஆண்டு கால
தோல்வியின்
நிழலைப்பிரதிபலிக்கும்
அந்தத
விழிகளில்
சகிப்பின் கடைசிக்கணம்
முடிவடைவதைக் கண்டேன்
------------------------------------
No comments:
Post a Comment