எழுதியவர்: கருணாகரன்
01.கருணையில்லாத பிணம்
கருணையில்லாத பிணம்
எல்லோரையும்
கதறியழ வைக்கிறது
அன்பின்றி
சிறு நன்றியுமின்றி
சாவின் களை நிரம்பிய முற்றத்தில்
துக்கம் பூத்து
படர்கிறது வாசமாய்
பேரிசை கொண்டெழுகிறாள்
ஒப்பாரிப் பெண்
உயிரைத் தேடி
அசைவைத் தேடி
எந்தக்குரலுக்கும் பிரதிபலிப்பின்றி
கரையமுடியாதிருக்கிறது
மயானம்
முடிந்தது ஒரு பயணம்
விலகியது மந்தை
கூட்டத்தில் பெரும் பள்ளமாய்
துக்கத்தின் மறை பெருக்கி
மிஞ்சிய கனவில்
தீ மூழுமா
புல் முளைக்குமா
வெற்றிடத்தில் அமர்கிறது காகம்
பிதிர்ச் சோற்றுக்காய்
கரைந்து
பாடல் பாடியவாறு
போய்ச்சேர்ந்த பிறவிக்காய்
இறுதி நேரப்பரிசை
அழாது கொடுக்க யார் வருவீPர்
இறுதி விடை பெற்றபின்னும்
துக்கத்தோடா
வழிவிடுவது
ஒரு துளி சிரிப்பையொலிக்க
யாராலும் முடியவில்லை
தோற்றது போ
இவ்வுலகம்
துடிக்கும் மரக்கிளையில்
காற்றை விலக்கி
அமரும் குருவிகள்
யாதறிந்தன
இந்த மரணப்பொழுதைப்பற்றியும்
விடை பெற்ற பயணி குறித்தும்
-------------------------------------------------
02.இனிச் சொல்ல முடியாது
மேற்குச் சூரியன் மறைகிறது
இருள் மணக்கும் வனத்தில்
உதிர்ந்த சிறகுகளின் குவியல்.
மாமிச நெடில் வீசும்
மரங்களில் எழுதிய பெயர்கள்
வேட்டைக்காரனை ஞாகப்படுத்துகின்றன
கண்காணாத தேசத்து பரிவாரங்களின் பரிகாசத்தில்
செய்வதற் கெதுவுமின்றி
முழந்தாள்களில் தலையை வைத்து
மண்டியிட்டழுதாள் தேவி
பெருந்தேவி
கொக்குகள் பறந்து திசை பெயர்ந்த
மாலையில்
வயற் கொட்டிலில்
புகை மெல்லக் கிழம்பி வர
மூள்கிறது நெருப்பு
உடுக்கொலி நிரம்பும் வயல் வெளியில்
முன் பனிக் குளிர் வாட்;ட
கொடுகிக்கிடக்கும் கிழவனின் காதுகளில்
தேள் கொட்டியது
வடக்கே பெரும் பீரங்கி முழக்கம்
ஆயிரம் தலைகொண்ட நாகம்
படமெடுத்தாடும் சந்நதத்தை
காட்டின் நாயகி கண்டு துணுக்குற்றாள்
கொல்லைப்புறத்தில்
மருத மரங்களில்
கூடிய பறவைகள் சிதறித் தெறிக்க
இருள் விழுங்கிய
தாமரைக் குளத்தில்
மருத மரங்கள் பாறி வீழ்ந்தன
சனங்களின் குரலால்
நிறைந்த வானத்தில்
எந்த நட்சத்திரமுமில்லை
கண்ணறிய.
புயல் கொண்டு போகிறது
கையிலேந்திய
ஒரு சொட்டு நீரையும்
---------------------------------------
03.இரவுக்கரை
இன்றிரவு
பெயர்ந்து
ஒரு பகலிடம் போய்ச்சேர்ந்தபோது
நானிறங்கினேன்
அதிலிருந்து பதற்றத்தோடு
நகரம்
நாய்களால் நிரம்பியிருந்தது
ஒரேயொரு நாயினால்
படைத்தளபதிகள்
பீரங்கிகளோடு சம்பாஷித்துக் கொண்டிருக்கையில்
இரகசியமாக
பனைகளின் மறைவில்
நகர்ந்து கொண்டிருந்த சூரியனுக்கு
ஒரு சிப்பாய் குறிவைத்தான்
சிதறித் தெறித்தன பல்லாயிரம் பனைகள்
நகரத்தில்
புழுக்களுக்கு வணக்கம் சொல்லி
வரவேற்றான் படைத்தளபதி
ஒரு விருந்துக்காக
துளிரும் இலைகளின் மேல்
புழுக்கள் கூடுகட்டின
யாரும் கவனிக்கவில்லை
பீரங்கிகளிலிருந்து இரத்தம் வடிவதையும்
கண்ணீர் பெருகுவதையும்
அப்போது
அலறியபடி வந்த சிப்பாய்
தளபதியின் காலடியில்
மண்டியிட்டழுதான்
அந்தப்பீரங்கிகளில் ஒன்றையேனும்
தந்ததால்
நீர் பெய்து தன்வம்சம் பெருக்கும்
திறன் பெறுவெனென்று
கூடிய தளபதிகள்
சிப்பாயை
முறிந்த பனைகளின் கீழே
புழுக்களிடம் பரிசளித்தனர்
முற்றிய பகலில்
திணறிக் கொண்டிருந்தன
முந்தைய இரவும் வரத்தயங்கும் இரவும்
என்னை எங்கும் காணவேயில்லை
-----------------------------------------------
04.பீரங்கியின் குழல் வாய் மொழி
அடங்க மறுக்கும் சிறு குரலை
மறைத்து வைத்திருந்தேன்
பதுங்கு குழியின் இடுக்கினுள்
பீரங்கியிடம் அது சொல்லவிருந்த
சில வார்தைகளையும்
கேட்கவிருந்த சில கேள்விகளையும்
நான் களவாடினேன்
நிகழக்கூடிய அபாயம் கருதி
ஐயாஇ ஒரு போதும் எதற்கும்
அடங்கியதில்லை
நெஞ்சறிந்த உண்மையை யன்றி
நானோ
ஒரு பல்லியாகிச் சுவரில் ஒட்டினேன்
அது பகல்
தீரா விடாய் கொண்ட பகல்
தேவாலயங்கள் இடிந்து வீழ்ந்த
அப்போதில்
இடிபாடுகளில் புறாக்களும்
பிரார்த்தனைகளும் சிக்கிய வேளை
பீரங்கிகளின் குழல் வாய் மொழியைக் கேட்டேன்
அருகில்
மிக அருகில்
யம சேனை
என்னை மிதித்துச் சென்றது
போதையுடன.
பெருகிய குருதியில்
தாகம் தீPர்த்த பகல்
கள்வனைப்போல் இரவிடம் பதுங்கியது
இதோ சிதறிக்கிடக்கிறது
கோவில் மணியோசை
இறுதி நேரப்பிரார்த்தனையின்
கடைசிச் சொற்கள்
இனித் தேவனைப்பாட
சொற்களிருக்குமா
பிரார்த்தனைகளிருக்குமா
ஆயிரமாயிரம் சுடர் கொண்ட விழிகளோடு
வானத்தை வெறித்தபடியிருக்கும்
சிறுமியின் அருகில்
பெயர்ந்து கொண்டிருந்தது
மிஞ்சிய நம்பிக்கையும்
அவள் சேகரித்து வைத்திருந்த எதிர்காலமும்.
பிளந்து கொண்டு போகிறது
பூமி
என்னிடமில்லை
அடங்க மறுத்துத் திணறிய அக்குரல்
இப்போது
---------------------------------------------------
05.சூடிய போதில் மாலை
ஒரு மாலை கொண்டு வா
பீரங்கியின் கழுத்தில் சூடலாம்
சாவின் தீரப்பசியுடைய
பெருந்தேவன் இதுவல்லவா
இந்தப்பகலை
கொய்து
சுவரில் அறையுங்கள்
ஒரு பகலில் எதுதான் தோற்கும்
எதுதான் வெல்லும்
வாழ்வைத் தோற்கடித்த
மரணத்தின் முன்னே இரவென்ன பகலென்ன
சிலுவைக்கருகில் சாவின் பிணமும்
சேகரித்த சிரிப்பும்
தனிமையில்
மரங்கள் பைத்தியமாகி
நடந்து திரிகையில்
இதோ வசந்தம்
கண்களிலிலிருந்தும் மரங்கள் பூக்களிலிருந்தும்
பெயர்க்கப்பட்டு வருகிறது
மனதை விழுங்கி
வேண்டப்படாத மௌனத்தை
பரப்பி இருக்கும்
அந்தச் சனங்களிடம்
ஒரு வார்த்தைஇ ஒரேயொரு வார்த்தை
பெற்றுக் கொண்ட பிறகு
மெல்ல வாருங்கள் இந்தப் பீரங்கிக்கருகில்
அவனுடைய தோலில்
முழங்கப்படும் பேரிசைக்காக
காத்திருக்கும் வேதனையுடைய காலையே
நடுங்கும் கரங்களோடு
அலைகிற காற்றுக்கருகிலே
மூர்ச்சையற்றுக் கிடக்கிறாள்
அவனுடைய தாய்
ஒரு தகர்ந்து போன பாலமாய்
எங்கே பாண்காரன்
இலையான்களை விட்டுச் சென்றது
கருணையில்லாத பிணம்
பசியின் கூடாரத்துள் வெற்றிக்கொடிகளை
களவாடிச் சென்ற
வெளியாட்களை தேடப்பொனது யார்
காட்டு வழியில் சூடிய மாலைகளோடு நின்ற
பீரங்கிகளில்
மோதி வீழ்ந்தவர் யார்
சருகுகளில் வேர் கொண்டெழுகிறது
காடு
இந்த வேதனைகளில் பற்றியெரியும்
என்னுடலை தீயுடன் தருகிறேன்
யாராவது கொண்டு செல்லுங்கள்இ எங்காவது
படையாட்களிடம்
பூக்களையும் பொம்மைகளையும்
கடந்த காலத்தையம் கொடுத்து
ஒரு படைவிருத்தியைச் செய்வோம் என்ற
வழிப்போக்கனை தேடுகிறேன் விருந்துக்காக
காலம் அவனைப் பணிக
நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும்
ஓட்;டை போடும்
நுட்பத்துக்காக
பரிசளித்துக் கொண்டிருக்க முடியுமா எப்போதும்
படைக் கென்றாள்
பாலகி
யாருமில்லை இந்த வெளியிலும் இருட்டிலும்
தனித்தேயிருக்கிறது
வழி
ஒளியுமின்றி இருளுமின்றி
ஒரு சிதறிய கண்ணாய் …
------------------------------------------
Tuesday, December 18, 2007
Sunday, December 16, 2007
கருணாகரன் கவிதைகள்
எழுதியவர்: கருணாகரன்
--------------------------------------------------
பரிசு
மணல்வெளிக் கோயிலில்
பாடுகளைச் சொல்லி
மன்றாடும் பெண்ணிடம்
வழிபாட்டின் ரகசியம் என்னவென்று
கடவுள் கேட்டார்
அந்த அதிகாலையில்
கடவுளின் குரல்
அவளுடைய செவிகளை அண்ட விடாது
பெருகிய போரொலி
கடவுளைத் தொடர்ந்து பேசவிடவில்லை
கடவுள் ஏதேதா சொல்வதை
அவதானித்த அவள்
அவரை நெருங்கிப்போய்
அருகிருந்து விவரம் கேட்க முனைகையில்
பார்த்தாள்
பதுங்கு குழிக்கருகில்
கடவுளின் அங்க வஸ்திரம் தனியே கிடந்தது
அவளதை தீண்டிட முன்னே
அவளைச்சுற்றி
ஒரு பாம்பாக வளைந்த தது
பிறகு
மேலெழுந்து போனது
எங்கோ
அவள்
தேவாலயத்தின் சுவர்களில்
தன்னுடைய தலையை மோதி அழுதாள்
தனக்கும் கடவுளுக்கு மிடையிலான
பந்தத்ததை சாட்சியாக வைத்து
பிறகு
மணல்வெளித் தேவாலயத்தில்
கடவுள்
நீண்ட நாட்களாக வர முடியாதிருந்தார்
அவளுடைய குரலும் வேதனையும்
அங்கிருக்கென்று
தேவாலயத்தில் நிரம்பிய
அவளுடைய குரல்
மணல்வெளியில் சுவறிக் கொண்டிருக்கிறது
-------------------------------------------
சிலுவை, இறுதி முத்தம், உண்மை, தண்டனை
என்றவாறானவற்றுக்கான முகாந்திரம்
மாம்பூக்கள் நிரம்பிய முற்றத்தில்
இன்று கோலமில்லை
கண்ணீர்த்துளிகளைப் பெருக்கிய காலையில்
ஒரு
மூடப்பட்ட சவப்பெட்டி
கடக்க முடியாத நிழலாய்
சாட்சியாய் வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கும் உங்களுக்குமிடையில்
ஓலங்கள்
அழுகை
கோபம்
வசைகள்
மன்னிப்பில்லை
மகிமையில்லை
பெருந்துக்கத்தின் முன்னே
எல்லா வேஷங்களும் களையப்படுகின்றன
அவர்களை
அழவிடுங்கள்
அவர்கள் வசைபாடட்டும்
அவர்கள் அப்படித்தான்
உண்மையைப்பேச விரும்புகிறார்கள்.
உண்மையைப் பேசுவதற்காக
ஒரு உயிரைக் கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது
அதுவும் இந்தக்கணத்தில் மட்டுமே
அவர்களால் அப்படிப் பேசமுடியும்
திறக்கப்படாத சவப்பெட்டியில்
ஒரு சாவியுண்டு
அதுதான் இப்போது
உண்மையைத்திறக்கிறது

தூக்கு மேடையில் வைக்கப்பட்ட
வாக்கு மூலம்
எனக்கு
சாட்சியங்களில்லை
நிம்மியுமில்லை
இதோ
எனக்கான தூக்கு மேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.
அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்
நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை
நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்
உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனை;குரிய தல்லவா
எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்
நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை
நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே
என்னைக்கோவிக்காதே
நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்
உண்மைகளை நாம் ஒரு போதும்
அழியவிடலாமா
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்
நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது
என்ன செய்ய முடியம்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா
காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்

கடுங்கோடை
தேனெடுக்கத் தவிக்கும் ஊரில்
கோடை விளைந்த வயலிடைக்கண்டேன்
பசியுமிழும் கண்களோடு
இரண்டு சிறுவர்களை
கன்னங்களில்
இருள்குவிந்த போதிலும்
நெருப்பாயிருந்த கண்களில்
தகித்தது
தீரா வெக்கை
பெருகிய கோடையை
மேயும் மாடுகள்
முலுட்டுப் பூவரசம் மரங்களில்
எல்லா மகிழ்ச்சியோடும்
எல்லாத் துக்கத்தோடும் புலுனிகள்
காற்றள்ளி வந்த கோடையின் குரலை
வாங்கியதா வெளி
ஏந்தியதா பனை
இரைச்சல்
கோடையின் பேயிரைச்சல்
வெக்கையில் அனுங்கும்
வயல்வெளியில் பெருவிசமாய்
அனல்மேயும்
அப்பொழுதில்
வடலிகளில் தாவும்
அணில்களும்
அந்தச்சிறுவர்களும்
வானத்தின் கீழே
பிரமாண்டமாயினர்
புலுனிச்சத்தத்தின் பின்னணியில்

தாமரைக்குளத்தில் இறந்த மனிதனும்
பூத்த தாமரைகளும்
தாமப்பா குளிக்கப்போனபோதும்
தாமரைக்குளம்
பூத்திருந்தது
மருத மரநிழலில்
தண்ணீரும்; படு குளிராக இருந்தது
பகல் முழுதும்
தாங்கொணாச் சூரியன்
நெருப்பையவிழ்;த்தபோதும்
தாமரைக்குளத்தில்
தண்ணீர் குளிராகத்தானிருந்தது.
தாமப்பாவுக்கும்
தாமரைக்குளத்துக்கும்
கோடி சம்மந்தம்
எந்த ரகசியங்களையும்
தாமரைக்குளத்திடம்
மறைத்ததில்லை
அவர்
முப்பது வருசமாய்
காலைக்குளியல்
மாலை நீராடல்
கண்ணன் கோயில் தீர்த்தத்தில்
கரையெல்லாம் தாமரைகள்
பூக்களும் மொட்டுகளுமாய்
தாமப்பாவோடு
ஒரு பின்னேரம்
தாமப்பா மட்டும்
தாமரைக்குளத்தில்
குளம் அவரைக் கொன்று விட்டதா
தாமப்பா குளத்தில் மூழ்கி இறந்தாரா

யாரும் யாருக்காகவும் இல்லை
யாரும் யாருக்காகவும் இல்லை என்றபோது
இந்தப்பூமியில் இல்லை
பாதாளமும்
கோபுரமும்
நான் தேடினேன்
பாற்கடலை
அவன் தேடினான்
விசமலையை
கலசங்கள் உடைந்து வீழ்கின்றன
இருக்கட்டும் வான் வெளியில் பறக்கும்
நமது கனவுகளும்
பொய்யும்
கண்ணீரில் பிரதிபலித்த
முகங்களை
கடக்க முடியாமல் திணறிய
ஒரு காலம்
பழி நிரம்பி உறைந்தது
வழியற்ற வெள்ளாடுகளை
வேட்டையாடுகிறது
காடு
நான் நெருப்பைத்தின்கிறேன்
பாழும்
சேற்றில் நாற்றமெடுக்கும்
புழுக்களோடென்னை
பழகவைக்கிறேன்
இசை ஒரு நொருங்கிய
பாத்திரமாக சிதறிக்கிடக்கிறது
காற்றில் பரவுகின்றன
நெருப்புத்துகள்கள்
நாயெங்கே பூனையெங்கே
என் காலை இழுத்துக் கொண்டு போகின்றன
கரப்பான் பூச்சிகள்
பங்கருக்குள் இருள்
இருளுக்குள் இருக்கிறது பாம்பு
பங்கருக்கு மேலேயும் சுற்றுகிறது பாம்பு
சிறகோடு

திரும்ப முடியாத திசை
ஒரு நூலில் ஆடுகிறது
நாடகம்
கலக்கத்தின் முனை
இன்னும் கூர்மையடைகிறது
இரத்தத்தை ஊற்றிவிட்டு
பாத்திரத்தைக்கழுவுகிறான் கடைக்காரன்
இலையான்கள் தூங்கப்போய்விட்டன
நான் முழித்திருக்கிறேன்
நினைவில் வருகிறாள் லோத்தின் மனைவி
அழமுடியாமலிருக்கும் அக்மதோவா
யாரிடமும் பேசவில்லை
ரஞ்சகுமாரின் கோசலை
இன்னும் விம்மலை நிறுத்தவில்லை.
திரும்ப முடியாத திசையில்
சென்றுவிட்டது படகு
மலையுச்சிக்கு வா
கல்லிலும் மரம் நிற்கும் அதிசயத்தை
சொல்லும் உன் கண்கள்
கடலின் ஆழத்தில்
தேங்கி நிற்கிறது இரத்தத்துளிகளும் கண்ணீரும்
கரைய முடியாததுயரமும்
அவர்கள் திட்டிய
வசையும்
சாம்பல் மேட்டில்
காத்திருக்கிறான்
புலவன்
இரவு
அவனிடம் விடை பெற மறுக்கிறது
காலையைச்சந்திக்க அதனிடம்
எந்த வலிமையும் இல்லை
இன்;னும் வீசிக்கொண்டிருக்கிறது
பிணத்தின் வாடை
எங்கே அந்தக்காகங்கள்
கடற்கரையில்
பாடமறுத்த தேவனை
அவர்கள் சிலுவையிலறைந்தபோது
எழுந்த குரல்
அந்த மண்ணில் சுவறிவிட்டதாக
அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள்.
திடுமுட்டாக வந்த விருந்தாளியை
அழைத்துப்போய்
மாப்பிளையாக்கினாள் காதலி
பள்ளிக்குப் போக மறுத்த பிள்ளைகளை
கூட்டிச் செல்கிறான்
ஊராடி

எதிர் முகம் நேர் முகம்
தாகத்தின் ஒளியும் நிழலுமாய்
என்னிடம் வந்தாய் அன்று
நிழலுமில்லாத
வெயிலுமில்லாத
ஒரு பின்னேரம்
ஒழுங்கையில் நாம் சந்தித்தோம்
யாருக்கும் தெரியாமல்
நினைவுகளையும் ரகசியங்களையும்
எடுத்துவந்திருந்தாய்
என்னிடமிருக்கவில்லை
துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கு மிடையிலான பாலம்
நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்கு மிடையிலான
தொடுப்புகள்.
பூவரசம் மரங்கள் காற்றில் அசைந்தன
தூரத்தில்
பனைகளின் பின்னே
நம் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது
மாலைச் சூரியன்
நான் இன்னும் சிறுவனா
இல்லை
நீதான் இன்னும் சிறுமியாக இருக்கிறாயா
அல்லது
இருவருமே சின்னஞ்சிறுசுகளாகத் தானிருக்கிறோமா
காலம் எங்கே
மறைந்தது.
காற்றுக் குதூகலித்து முத்தமிடுகிறது
பூரசமரங்களை
நீ தவிக்கிறாய்
பனைகளின் பின்னே
வானத்தை நிறம் மாற்றுகிறது
சூரியன்
இந்த ஒழுங்கையில்
மணலின் மேலே
இரண்டு குருவிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன
அந்த மாலையில்
தாகத்தின் ஒளியும் நிழலுமாய்
நீ வந்தாய்
ஒரு மைம்மற் பின்னேரம்
என் தலையைச் சீவியெறிந்தது
எதற்கான பரிசாக
எதற்கான தண்டனையாக

Sunday, July 15, 2007
பறவைக்காதல்
-------------------------------
எழுதியவர் _ கருணாகரன்
---------------------------------------------
பறவையின் சிறகில் காத்திருக்கிறது
பயணமும் பயணவெளியும்
பறவையின் உயிரும்
அழகும்
பறவையின் அடையாளமும்
அதன் சிறகில்
நிகழ்கிறது
பயணமும் பயணவெளியும்
காற்றின் துணையும்
வெளியிலும் காற்றிலும்
தன்னை நிகழ்த்தும்
பறவை
அடைகிறது
தன் புள்ளியை
எனினும்
அது தன் பயணத்தின்
சுவடுகளை விட்டுச்செல்லவுமில்லை
எடுத்துச்செல்லவுமில்லை
காற்றையும் சிறகையும்
இணைக்கும் நுட்பத்தை கற்ற பறவை
சொல்லித்தருமா
எனக்கும் தன் வாழ்தலின்
நுட்பங்களை
காற்றில்
தன்னை நிகழ்த்தும்
நுட்பத்தினூடாக
அது கட்டுகிறது
தன் பயணக்கூட்டை
சிறகிலேயே
அதன் பயணமும் இளைப்பாறலும் நிகழ்கின்றன
அதனதன் தருணங்களில்
கூடவே
பயணிக்கும்போது
இளைப்பாறலும் இளைப்பாறலின்போது
பயணமும்.

அறம் அவரவர் சார்ந்தது
----------------------------
எழுதியவர்- கருணாகரன்
----------------------------------------------
அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. எழுதப்பட்டுள்ள வரலாற்றுக் குறிப்புகளும் அப்படித்தான் சொல்லுகின்றன. ஆனால், இன்றைய மறுசிந்தனை இந்த வரலாற்றுப் புனைவின் மீது கேள்விகளை எழுப்புகிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அமெரிக்கா இருக்கவில்லையா? அல்லது அப்படி அமெரிக்கா இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் போன்ற பல கேள்விகள் வரலாற்றுப் புனைவுகளின் மீது எழுப்பப்படும்போது அறியப்பட்ட வரலாற்றின் பொய் முகமும் குரூரமும் வெளிப்படுகிறது.
அநேகமாக அறியப்பட்ட எல்லா வரலாற்றுக்கும் மறுபக்கம் அல்லது வேறுமுகங்கள் இருக்கின்றன.கொலம்பஸ் அமெரிக்காவில் கால்வைத்தபோது அங்கிருந்து பூர்வகுடிகளைக் கணக்கற்ற விதத்தில் கொன்று குவித்தார். அப்படி அந்தப் பூர்வீகக் குடிகளைக் கொன்று, வெற்றி கொண்டுதான் அமெரிக்காவில் கொலம்பஸ் தன்னை நிலை நிறுத்தினார். மேற்குலகின் பார்வையிலும், அறிவிலும் கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார். அமெரிக்காவுக்கு ஒளியூட்டினார். அதனைத் துலங்கச் செய்தார் என்ற மனப்பதிவுதான் இருக்கிறது. இதனால், அவர்கள் கொலம்பஸை முதன்மை அடையாளமாகவும் வரலாற்றின் நாயகனாகவும் கொண்டாடுகின்றனர்.
கொலம்பஸ் கொன்று குவித்த அமெரிக்கப் பூர்வ குடிகளைப் பற்றிய கணக்கெடுப்புக்களோ மதிப்பீடோ மனப்பதிவோ மேற்கில் இல்லை. அது குறித்த வருத்தமோ தயக்கமோகூட அவர்களுக்கில்லை. குறிப்பாக, மேற்காதிக்கச் சிந்தனையில் இல்லை. இந்தியாவில் 1948 சனவரி 30 அன்று காந்தி கோட்சேயினால் சுட்டுக் கொல்லப் படுகிறார். காந்தியைச் சுட்டுக் கொன்றது தொடர்பாக 1948 ஓகஸ்ற் 11 அன்று கோட்சே நீதிமன்றத்தில் தன்னுடைய விரிவான வாக்குமூலத்தை அளிக்கின்றார். அப்போது இந்த வாக்கு மூலம் தடை செய்யப்பட்டு பின்னர் மொராஜி தேசாய் ஆட்சியிலிருந்த போது வெளியிடப்படுகிறது. காந்திக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை நாட்டின் மீது கொண்ட அக்கறை யினாலேயே என்று கோட்சே சொல்கிறார். அதற்கு ஆதாரமாக சீக்கிய, இந்து அகதிகள் காந்தியின் உண்ணாவிரதத்தினால் மசூதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதும் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாவை இந்தியா கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதும் பாகிஸ்தானைப் பிரிப்பதற்கு காந்தியே முக்கிய காரணமாக இருந்தார் என்றும் கோட்சே தெரிவித்தார்.
காந்தியின் கோணத்திலிருந்து அணுகுவோர் பெரும்பான்மையான இந்துக்கள் முஸ்லிம்களின் மீது பரிவுடன் நடந்து கொள்வார்கள், பெருந்தன்மையுடன் இணைந்து வாழ்வார்கள் என்று காந்தி நினைத்தார் என்கின்றனர்.இங்கே பெருந்தன்மை பற்றியோ பரிவுபற்றியோ பேசுவதைவிட அவரவர்க்கான உரிமைகள் பற்றியே பேசவேண்டும். அதுவே அவசியமானது என்கின்றனர் காந்தியை மறுஆய்வுக்குட்படுத்தும் இன்னொரு சாரார். முஸ்லிம்களுக்குரிய உரிமை இந்துக்களுக்கான உரிமை என்பவை தனித்தனியாக வரையறுக்கப்பட வேண்டுமேயொழிய வெறுமனே பரிவும் இரக்கமும் மட்டுமல்ல என்கின்றனர் அவர்கள். இவை ஒவ்வொன்று தொடர்பாகவும் வெவ்வேறு கோணங்களிலான பார்வைகள் உண்டு.
இந்த நிகழ்ச்சிகள் குறித்து இந்தியாவில் படிக்கப்படும் வரலாறும், பாகிஸ்தானில் படிக்கப்படும் வரலாறும், பிரிட்டனில் படிக்கப்படும் வரலாறும் வெவ்வேறாகவே இருக்கும் என்கிறார் சுரேஸ்குமார இந்திரஜித். ஒரு இடத்திற்குப் பல வரைபடங்களும் ஒரு காலத்துக்குப் பல சரித்திரங்களும் உண்டென்றும் அவர் மேலும் சொல்கிறார்.
மாற்றுச் சிந்தனையாளர்கள் வரலாற்றை மறுவாசிப்புச் செய்கின்றனர். இன்றைய அறிவுலகம் பன்முகத்தன்மையை அதிகம் நம்புகிறது. பன்முகத் தன்மையில் உருவாகுகின்ற பரிமாணங்களும் வலுவும் அதிகம் என்ற உண்மையை அது நிரூபிக்கிறதுஅமெரிக்காவில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானவர்கள் குறித்த குறிப்புக்களோ அந்தக் கொலைகள் குறித்த குற்றவுணர்ச்சியோ இன்றும் மேற்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது மேற்கின் பன்முகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கொடுமையின் ஆறாதகாயங்களை தமிழில் மறுவாசிப்புச் செய்திருந்தார் எஸ். வி. ராஜதுரை. 1995இல் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுபமங்களா இதழில் எஸ்.வி.ஆர். இது பற்றி இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார்.
கொலம்பஸின் குரூரமுகத்தை; அதில் அவர் தெளிவாகக் காட்டினார். கூடவே மேற்குலகின் நாகரிகத்தையும். இதேபோல ச. தமிழ்ச்செல்வன் சுமங்களாவில் வேறொரு கட்டுரை எழுதியிருந்தார்.உருண்டையான உலகத்தில் எப்படிக் கிழக்கும் மேற்கும் என்ற பிரிப்புக்கள் செய்யப்பட்டன? எந்த நோக்கத்திலும் எந்தத் தேவையின் அடிப்படையிலும் இந்தப் பிரிப்புகளும் பூமியின் ரேகைக்கோடுகளின் வரைபும் எப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
நமது கல்வி முறையையும், மனப்பதிவுகளையும் பிளந்தெறியும் விதமாக தமிழ்ச் செல்வன் பல உண்மைகளை எடுத்து வெளியே வைக்கிறார். ஐரோப்பியர்களின் மேலாதிக்கமே இந்த வரைபுகளை நிர்ணயம் செய்தன. அதிலும் பிரித்தானிய எழுச்சியும் அதன் விரிவாக்கமும் இந்தத் தேவைகளை உருவாக்கின. இந்த எழுச்சியோடிணைந்து எழுந்த அறிவுவாதம் புதிய நிர்மாண விரிவாக்கத்திற்கு ஏற்ற மாதிரித் தன்னை நெகிழ்ந்து கொடுத்து இந்த நிர்ணயங்களைச் செய்தன.
ஐரோப்பா ஒரு காலம் தன்னை மையப்படுத்தியே அனைத்தையும் சிந்தித்தது என்பதே இதன் சாரம். வரலாறு என்பது குரூரமானது என்று சொல்வதன் உண்மை ஒரு வகையில் சரிதான். அது எத்தனைதான் படிப்பினைகளைத்தந்தாலும் மீண்டும் மீண்டும் குருரங்கள் நிகழ்வதற்கான நிலைமைதானே மிஞ்சிக்கிடக்கிறது.
இப்போது ஈராக்கில் தினமும் கொலைகள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. கட்டற்ற வகையில் அழிவுகள் தொடர்கின்றன. இன்றைய ஈராக் தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடுகளும் அறிவிப்புகளும் எப்படி இருக்கின்றன என்பது சகலருக்கும் தெரிந்தது. அதேவேளை, ஈராக்கியர்களின் மனப்பதிவும் விருப்புகளும் எப்படி என்பதும் தெரிந்ததே. குறிப்பாக, ஈராக்கிலுள்ள ஸியா முஸ்லிம்களின் மனப்பதிவு வேறானது. சுனி முஸ்லிம்களின் பதிவு வேறானது. ஈராக்கிய அரசு மற்றும் போராட்டக் குழுக்களின் பதிவுகளும் நோக்கங்களும் வேறுவேறானவை. அங்குள்ள மக்களின் மனப்பதிவுகளும் வேறானவை.இப்போது ஈராக்கின் வரலாறு என்பது அவரவர் நோக்கு, மனப்பதிவு, தேவைகளின் அடிப்படையில் வெவ்வேறாக எழுதப்பட வேண்டும். அப்படித்தான் எழுதவும்படுகிறது. இதில் சில இப்போது முன்னாதிக்கம் செலுத்தலாம். சிலவோ இப்போது பின்தங்கியிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் ஒருபோது மீண்டு மேலெழுந்து வரும்.
ஒற்றைப்படையான வரைபுகள் தகர்ந்துவரும் யுகம் இதுவென்பதை இந்த விடயங்கள் அனுபவமாக்குகின்றன.வரலாறு என்பது அதிகாரத்தினால் கட்டமைக்கப்படுகிறது என்று சொல்வோர் உண்டு. அது அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தினால் அல்லது கலகத்தினால் உருவாக்கப்படுவது என்று குறிப்பிடுவோரும் உண்டு.
வரலாறு என்பது வாழும் முறையால் உருவாகுவது என்று வாதிடுவோரும் உண்டு. வரலாற்றை அறிவே நிர்மாணிக்கிறது என்று நிரூபணம் செய்வோர்களும் இருக்கின்றார்கள். அதிகாரத்தினால் நிர்மாணிக்கப்படும் வரலாற்றின் கீழே குருதியும், நிணமும் நாறிக்கிடக்கின்றன. அதற்குள் தீராத வலியும் அவமானமும் குரோதமும் தீராப்பழியாக கொதித்துக்கொண்டும் பெரிதாகிக் கொண்டுமே இருக்கின்றன.ஆபிரிக்காவை வெற்றி கொண்ட வெள்ளையர்கள் ஆபிரிக்காவின் வரலாற்றைப் புனைந்திருக்கிறார்கள். இதுதான் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் நடந்தது. ஆனால், அங்கெல்லாம் நூற்றாண்டுத் துயரமாய் நூற்றாண்டுகளாய் தொடரும் வன்மமாய் இன்றும் பழங்குடிகள், மற்றும் கறுப்பர்களிடையே கோபமும் துயரமும் கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றன. அவர்களுக்கான நீதியின்மைகள் தொடரும் வரையில் வெள்ளையர்கள் தங்களின் நாகரிகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. எத்தனைதான் வெள்ளை சனநாயகம் அழகாகப் பேசினாலும் அது ஆதிக்க வெளிப்பாடாகவோ அல்லது நாகரிகப் பொய்மையாகவோதான் இருக்கிறது.
அறத்தின் தளத்தில் கட்டமைக்கப்படுகின்ற மனப்பாங்கு, நீதி, நாகரிகம், வரலாறு குறித்த சிந்தனைகள் வலுவடைந்து வரும் சூழலில் அதன் தீவிரத்தை மழுங்கச் செய்வனவாகவே இன்றைய பொதுஅமைப்புக்களின் விரிவாக்கத்தை மேற்குலகம் செய்து வருகின்றது என்றும் சொல்லப்படுகிறது.ஒரு பக்கம் எது அறம் என்ற வாதங்களும் உண்டு. அவரவர் தத்தமது நிலைப்பாடு களிலிருந்து தமக்கான அறத்தை உருவாக்குகிறார்கள். இன்னும் சரியாகச் சொன்னால், தமது நியாயங்களுக்கு ஒரு அறக்கோட்பாட்டை உருவாக்குகின்றனர்.
ஈராக்கில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்பது அமெரிக்காவின் அறம். அமெரிக்கா வைத் துரத்துவோம் என்பது ஈராக்கிலுள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களின் அறம். வெளியே இருந்து நோக்கும் ஒருவர் இந்த இரண்டிலும் எதை மெய்யான அறம் என்று கொள்வது? இங்கே விரிந்த அறிவு தேவைப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவைக் கட்டமைப்பதே பல சந்தர்ப்பங்களிலும் அதிகாரமையங்களாக இருக்கின்றன.
இலங்கை வரலாற்றில் சிங்கள மேலாதிக்க சிந்தனை உருவாக்கி வைத்திருக்கும் அறிவு, மேற்குலகம் தனது சந்தைப் பொருளாதாரத்துக்கமைவாக உருவாக்கிவரும் அறிவு என்பவற்றை இங்கே கவனிக்கலாம்.பாடசாலைக் கல்வி தொடக்கம் ஊடகங்கள் மற்றும் அரசியல் இராஜதந்திர செயற்பாடுகள் வரையில் இந்த மேலாதிக்க அறிவு விரிவாக்கம் நடைபெறுகிறது.ஆகவே, இதன் வழி நின்றே இவ்வாறான வரலாற்றுப்புனைவுகளின் மீது நின்றே அறத்தையும் அதாவது, மேலாதிக்க சக்திகளின் நியாயத்தையும் உலகம் ஏற்க வேண்டியுள்ளது. இது மிகக் கொடுமையானது? நேரடியான ஒடுக்குமுறையையும்விட மிகப்பயங்கரமானதும் ஆபத்தானதும் இந்த அறிவு மயமாதலும் இந்த அறமயமாதலும் என்று எச்சரிக்கை செய்கின்றனர் விடுதலைக்கான சிந்தனையாளர்கள்.
விடுதலைக்கான அறத்தை ஒடுக்குமுறையின் அறம் ஒருபோதுமே அங்கீகரிப்பதில்லை.வரலாறு எப்படி அவரவர் நோக்கு, நலன் சார்ந்திருக்கிறதோ அவ்வாறுதான் அறப் பார்வையும் இருக்கிறது. இங்கே துயரமென்னவென்றால் எல்லா நோக்கு நிலைகளாலும் பல சந்தர்ப்பங்களிலும் வீழ்ச்சியடைவது வாழ்க்கைதான்.
வாழ்வை மேம்படுத்துவதற்காகவே உலகம் முழுவதும் எல்லாக் காரியங்களும் நடக்கின்றன என்று சொல்லப்படுகின்ற போதும் இதுவே மெய்யாய் நடக்கிறது.விடுதலை வரலாறும் விடுதலைக்கான அறமும் அதற்கான வழியையே திறக்க முயற்சிக்கின்றன. விடுதலை வரலாற்றில் சாதாரண மனிதர்களின் உணர்வுகளும் பங்கேற்பும் இடம்பெறுவது இதில் முக்கியமான அம்சம். இதுவே ஏனைய வரலாற்றியல்புகளை விடவும் வேறுபட்டிருப்பதும் மதிப்புக்குரியதாக அமைவதுமாகும்.சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களுடைய உணர்வுத் தளத்தி லிருந்தும் பிறக்கின்ற வரலாற்றுக்கும் அறத்துக்குமே ஏனைய வரலாற்றை விடவும் மதிப்பு அதிகமாகிறது.இது மற்றெல்லாப் புனைவுகளைவிடவும் அதிகம் வெளிப்படையானது. தவிர ஏனையவை அதிகமதிகம் ஆபத்தாக இருக்கும்போது இது மட்டும்தான் அவற்றிலிருந்து விலகி வேறு மாதிரியாக இருக்கிறது.ஆனால், இந்த சனங்களின் வரலாறு இலகுவில் எட்டிவிடக்கூடிய தல்ல. அது விடுதலைப் போராட்டச் சூழலைத் தவிர வேறெங்கும் சாத்தியமாவதுமில்லை.
எல்லாக் குறிவைப்புக்களில் இருந்தும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கு விடுதலையாளர்களுக்கே அதிகம் உண்டு. அதிக சவாலையும் அதிகவிழிப்பையும் விடுதலையாளர்களே கொண்டிருக்க வேண்டியது யதார்த்தத்தின் நியதி.
-----------------------------------------------------

ஒரு மைதானக்காட்சி
------------------------------
எழுதியவர்- கருணாகரன்
------------------------------------------------
ஆட்டம் முடிந்தபிறகு
வெளித்திருக்கிறது மைதானம்
வீரர்கள் போய்விட்டார்கள்
ஆரவாரங்களும் போய்விட்டன
ஆட்டம்பற்றிய
கதைகளோடும்
விமர்சனங்களோடும்
ரசிகர்களும் போய்விட்டார்கள்.
மைதானத்தில்
ஆடிய பந்து
யாருடைய கவனமுமின்றி
ஓய்ந்திருக்கிறது
தனியே
இப்போது
யாருக்காவது நினைவிருக்குமா
அந்தப்பந்தை?
மைதானத்துக்கும் பந்துக்குமிடையில்
ரகசியமாகப்படர்ந்திருந்த
மௌனவெளியில்
ஒப்பற்ற காயங்களோடு
வெற்றி பெற முடியாத
வீரர்கள்
நடந்துசென்ற காட்சி
உலுக்குகிறது
அரங்கத்திலும் அரங்கத்துக்கப்பாலும்.
-------------------------------------------------------

Thursday, July 5, 2007
பிரதிபலிப்பான்கள் பற்றி மேலும் சில
-----------------------------
எழுதியவர்- கருணாகரன்
----------------------------------------
பிரதிபலிப்பானகளின் முகத்தில்
இல்லையொரு
புதுப்புன்னகை
இல்லையொரு புது மொழி
இல்லையொரு புதுக்குரல்
இல்லையெந்தப்புதிதும்
உண்மையும்
இல்லை யென்றும்
பிரதிபலிப்பான்களுக்குச் சொந்த முகமும்
ஓரிதயமும்.
நீ
அனைப் பிரதிபலிக்கிறாய்
அவன்
அவரைப் பிரதிபலிக்கின்றான்
அவர் பிரதிபலிக்கவும்
ஒருவரிருக்கிறார்
உன்னை
இவன் பிரதிபலிக்கிறான்.
கடவுளே
இவனைப் பிரதிபலிக்காதிருக்கட்டும்
ஒருவரும்.
பிரதிபலிப்பான்களின்
சம்பாஷணையில்
ஒழிந்திருக்கிறது
கபடத்தின் சர்ப்ப நிழல்;
பிரதிபலிப்பான்களின்
செயல்களிலில்லைச் சுயமும் துளிர்ப்பும்.
பிரதிபலிப்பானகளிடம்
எப்போதுமிருப்பதில்லை
அன்புக்கும் நட்புக்குமான
அந்ததரங்கமும் வெளிப்படையும்.
ஒரு மாறாத புண்ணை
ஒவ்வொரு பிரதிபலிப்பான்களும்
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இதயமென்றதற்குப் பெயரிட்டு
அதில் நெளிகின்றன
புழுத்த பொய்கள்.
பிரதிபலிப்பான்களிடமிருந்து
நழுவிக்கொண்டிருக்கிறது
நிகழ்காலத்தின் மூச்சும்
எதிர் காலத்தின் விதையும்.

Wednesday, July 4, 2007
த.அகிலன் கவிதைகள் வெளிதேடியலையும் இன்னொரு பறவை
-----------------------------
எழுதியவர்-கருணாகரன்
-------------------------------------------------
அகிலனின் கவிதைகளைப்பற்றி எழுதத் தொடங்கும்போது முதலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. எந்த அகிலனின் கவிதைகளைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்ற கேள்வி உருவாகக்கூடியமாதிரி, தமிழில் பல அகிலன்களின் பெயர் பதிவாகியுள்ளது. அதிலும் ஈழத்தில் மட்டும் இரண்டு அகிலன்களுண்டு. ஒருவர் பா. அகிலன். மற்றவர் த.அகிலன். இருவருமே சமகாலத்தில் கவிதைகளை எழுதிவருகிறார்கள். இரண்டுபேருமே நவீன கவிதையின் புதிய பிரதேசங்களைக்கண்டடையும் முனைப்புடையவர்கள். எனவே இதில் எந்த அகிலனைப்பற்றி இங்கே எழுதப்படுகிறது என்று யாரும் முதலில் கேட்கவோ அவதானிக்கவோ கூடும். அதற்கு முன்னர் தமிழில் அகிலன் என்ற அடையாளம் பதிந்திருக்கும் விதம் குறித்து எழுதவேண்டிய நிலையுள்ளது.
இந்தப்பெயர் கடந்த தலைமுறையில் பதிந்த விதம் வேறுவிதமானது. அது படைப்பின் கூர்மைக்கும் செம்மைக்கும் எதிரானதாகவே இருந்தது. அந்தத்தலைமுறையில் இருந்த அகிலனை வாசித்தவர்கள் ஏராளம். அந்த அகிலன் தமிழ்ப்படைப்புக்கு எதிராக இயங்கியவர் என்ற தெளிவின்றியே அன்று தமிழ்ச்சமூகம் அந்த அகிலனைக் கொண்டாடியது. இப்போதும் பொதுவாக அந்த அகிலனைப்பற்றிய மறுவாசிப்புகளில்லாமலே தமிழ்ச்சமூகமிருக்கிறது. செய்யப்பட்ட மறு வாசிப்புகளையும் முன்வைக்கப்பட்ட விமரிசனங்களையும் தமிழ்ச்சமூகம் சரியாகப்புரிந்து கொண்டதாகவும் இல்லை. அகிலனுக்கு இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தபோதே படைப்பின் நுட்பங்களை அறிந்தவர்கள்கண்டித்தார்கள். அந்த விருதுக்கு அகிலன் தகுதியற்றவர் என்றும் எதிர்த்தார்கள். அப்போது விருதுக்குழு மீதே பெரும் குற்றம் சாட்டப்பட்டது. காலம் இவ்வளவு கடந்த பின்னும் அந்த விருது அகிலனுக்கு வழங்கப்பட்டமை குறித்து இன்னும் தீராத சர்ச்சைகளும் விமர்சனங்களுமுண்டு. ஆனால் அந்த அகிலன் தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்.
தமிழ்ச்சூழலின் அவல நிலையே இதுதான். தமிழில் பெரிதுங்கொண்டாடப்படுவோர் விழல்களாகவே இருந்துள்ளனர். இப்போதும் அப்படியான விழல்தனங்கள்தான் கொண்டாடப்படுகின்றன. விழல்தனங்கள் தமிழில் இலகுவாக வெற்றி பெற்றும் விடுகின்றன. பதிலாக சீரியஸானவை கவனிப்பாரற்றே கிடக்கின்றன. இந்த அறிவீனம் அல்லது புரிதலின்மை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுதான் பாரதியின் காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடருகிறது. பாரதியை அன்று பலரும் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்கிறோம். ஆனால் இப்போது மட்டும் யாரைச்சரியாகப் புரிந்து கொள்கிறோம். யாருக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறோம். தமிழில் பெருவாரியாகக் கொண்டாடப்;படும் சினிமா இதற்கு துலக்கமான உதாரணமாகும். வெற்றிப்படங்களாகவும் வெற்றிப்பட நாயகர்களாகவும் தமிழ்மூளை கண்டுபிடித்துக் கொண்டாடும் தரப்புகளின் சிறப்பு எதுவெனத் தெரியுமல்லவா. அதுபோலவே பெருவாரியான தமிழர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற படைப்பாளிகள், அரசியல்வாதிகள், விசயங்கள் எல்லாமே மிகவும் தரங்குறைந்தவையும் வாழ்க்கைக்கு எதிர்மாறானவையுமே இருக்கின்றன.பதிலாக தரமானவையும் சிறந்தவையும் பாராமுகமாக இருக்கின்றன. சீரியஸானவை புறக்கணிக்கப்படுகின்றன. சீரியஸான ஆட்களும்தான்.
இத்தகைய துயரமும் அவலமும் நிறைந்த பின்னணியில்தான் தமிழ்ப்படைப்புகளை அணுகவேண்டியிருக்கிறது. அதிலும் அகிலன் என்ற ஒரு படைப்பாளி எழுதிய கவிதைகளைப்பற்றி எழுதவரும்போது இந்த மாதிரி ஒரு முன்விளக்கத்தைக் கொடுக்கவேண்டிய வருத்தந்தரும் நிலையுமிருக்கிறது. இப்போது இரண்டு அகிலன்கள,; அகிலன் என்ற பெயர் தமிழ்ச்சூழலில் பதிந்துள்ள முறைமைக்கும் அடையாளத்துக்கும் மாறாக எழுதிவருகிறார்கள். இதில் பா. அகிலன் தன்னுடைய பதுங்குகுழி நாட்கள் என்ற தொகுப்புக்கூடாக பெருங்கவனிப்பைப் பெற்றவர். தமிழில் அகிலன் என்ற அடையாளம் பா.அகிலனின் மூலம் வேறுவிதமாக மாறுகிறது என்ற தொனியில் அவருடைய கவிதைகளை முன்வைத்துப் பேசும்போது வெங்கட்; சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இப்போது இன்னொரு அகிலன், வெங்கட் சாமிநாதன் சொன்னதைப் போல இன்னொரு புதிய அடையாளமாக தெரிகிறார். மாறுதலான பார்வையும் அனுபவமும் வெளிப்பாடும் கொண்ட ஒரு கவிதைத்தளத்தை நிர்மாணிக்க முனைகிறார் இந்தத் த. அகிலன்.
இவருடைய கவிதைகள் இன்னமும் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்படவில்லை. ஆனால் அகிலனின் கவிதைகள் பல இதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. அப்படி வெளியாகியுள்ள கவிதைகள்தான் இப்போது இந்த விமரிசனத்தை எழுத்தூண்டியிருக்கின்றன. புரிந்துகொள்ளுதலில் இடையறாது நிகழும் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தவறுகளையும் -துயரோடு- சொல்லத்துடிக்கின்றன த. அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள் மனிதனைச் சிதைக்கும் அவலத்தை அகிலன் சொல்கிறார். இப்படி புரிதலின்மையின் மையத்தை அகிலன் சொல்லத்துடிக்கும்போது அதை அவற்றின் அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல் வேறுவிதமாகப் புரிந்து கொள்ளும் நிலையும் யதார்த்தத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதுதான் மிகச் சுவாரசியமானதும் மிக அவலமானதுமாகும். புரிந்துகொள்ளலின்மை பற்றி பேசும்போது அதையே புரிந்து கொள்ளாமலிருக்கும் அவலத்தை என்னவென்று சொல்லலாம்.
புரிந்துகொள்ளலில் நடக்கின்ற குறைபாடுகளைப்பற்றி குறிப்பிடும்போது அதனையே குறைபாட்டுடன் புரிந்து கொள்ள முற்படும் அவலம் என்பது பெரும் வேதனைக்குரியது. இப்படியெல்லாம் புரிதலின்மை நிகழும்போது மனிதன் புழுவைப்போல துடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இந்தத் 'துடித்தல் ' என்ற அந்தரிப்பு நிலைக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் பேரவலம் அகிலனின் கவிதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. நவீன வாழ்வில் நிரம்பிக்கிடக்கும் காயங்களில் அநேகமானவை புரிதலின்மையினால் ஏற்படுவதே. புரிதலின்மையில் மொழியும் நடத்தைகளும் முக்கியமாகின்றன. மொழியின் தொனி பல சந்தர்;ப்பங்களிலும் எதிர்மறையான புரிதல்களை, விளக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது. சொல்லில் மட்டும் பிழையான பொருள் ஏற்பட்டு விடுவதில்லை. சொல்லும் தொனியிலும் தவறான புரிதல் நிகழ்ந்து விடுகிறது. இதற்கு மொழியின் விரிவிலுள்ள போதாமை ஒரு காரணம். அத்துடன் அந்தச் சொற்களைப்பற்றிய படிமமும் அவை உணர்த்துகிற முன்னனுபவங்களும் இவ்வாறு தவறான புரிதல்களுக்குக் காரணமாகிவிடுகின்றன. அவ்வாறு படிமம் உருவாகுவற்கு அப்போதைய மனித நடத்தைகளே காரணமாகின்றன. ஆகப் பொதுவாக, மொழிக்கும் அப்பால் மனித நடத்தைகள் முக்கியமானவையாகின்றன. இந்த நடத்தைகள்தான் சொல்லுக்கான பொருளை அர்த்தப்படுத்துகின்றன: நம்பகத்தன்மையையும் உருவாக்குகின்றன.
ஒரு காலத்தில் மதிப்பாக இருந்த சொல் பின்னர் கொச்சைப்படுத்தப்பட்ட பாவனைக்காளாகிறது. அம்மா என்ற சொல்லும் அது சுட்டும் உணர்வும் அந்த உறவும் அடையாளமும் மிகப் பெறுமதியானது. ஆனால் அது சுருக்கப்பட்டு கொச்சைப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நிலைக்கு வந்திருப்பதன் அவலத்தை என்ன என்பது. இன்று பொருளும் (அர்;த்தமும்) நம்பகத்தன்மையும் இழந்திருக்கும் ஏராளம் சொற்களுண்டு. இந்த அர்த்தமின்மையையும் நம்பகமின்மையையும் மனித நடத்தைகளே உருவாக்குகின்றன. அர்த்தத்தையும் நம்பகத்தன்மையையும் உருவாக்க வேண்டிய நடத்தைகள் அதற்கு எதிர்மாறாக இயங்குவதே இப்பொழுது அதிகரித்துள்ளது. இது இன்னுமின்னும் பெருகியபடியே இருக்கிறது. உறவுகளுக்குள் நாங்கள் பெரும்பாலும் சந்திக்கின்ற பல பிரச்சினைகளின் மையமே புரிந்து கொள்ளலில் நிகழ்கின்ற தவறுகளும் சறுக்கல்களுமே. அகிலனுடைய கவிதைகளின் மையம் இதுதான்.
என்னுடைய
காலடிச்சுவடுகள்
கண்காணிக்கப்படுபவை
புன்னகைகள்
விசாரணைக்கானவை
அடுத்த கணங்கள்பற்றிய
அச்சங்களும்
துயரும்
நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்
(அடுத்து வரும் கணங்கள்)
அதிகமதிகம் அவநம்பிக்கையும் தன்னலத்தின் குரூரமும் பெருகிக் கிடக்கும் சூழலில் விதிக்கப்பட்டிருக்கும் சாபமாகிக் கிடக்கிறது நியாயவானின் வாழ்க்கை. நீதியும் நியாயமும்கூட ஆளாளுக்கு வேறுபடுகின்றன. சார்புநிலைப்படுகின்றன. குடும்பங்கள் விரிசலடைந்து வருகின்றன. உறவுகளுக்குள் அந்நியத்தன்மை பெருகி முகமூடிகளை உற்பத்தி செய்கிறது. அன்பில் எண்ணற்ற கரும்புள்ளிகளையும் காயத்தையும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது புரிந்துணர்வின்மை. எதிரும் புதிருமான நிலைப்பாடுகளுக்கு முடிவேயில்லை என்றாகி விட்டது.
அகிலன் எழுதுகிறார்
எப்போதும்
எனது சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்மனதில்
ஒளிந்திருக்கிறது
(தவறி வீழ்ந்த முடிச்சு)
இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா
(எதிர்பார்ப்பு)
நான்
சிந்திப்பதை
நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்
அது என்னைக் கேள்விகளால்
குடைந்து கொண்டேயிருக்கிறது.
புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
கண்களின் பின்னாலுள்ள
இருள்நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான் நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான் சிந்திப்பதை நிறுத்தியேயாக வேண்டும்.
(சிந்திப்பது குறித்து)
ஒழுங்கமைப்புகள், தனியாள் நிலைப்பாடுகள் என்வற்றுக்கிடையிலான புரிதலில் உள்ள பெருங்குறைபாடுகள் வாழ்வைப்பிளந்தெறிகிறது. இந்த இரண்டையும் சமநிலைப்படுத்துவதிலும் சரியான அணுகுமுறைகளில்லை என்பது முக்கியமானது. இவற்றுக்கிடையிலான புரிதல் சரியாக நிகழ்ந்திருக்குமானால் அவலங்களுக்கும் துயரத்துக்கும் இடமேற்பட்டிருக்காது. தவிர முரண்களும் கொந்தளிப்பும் கூட ஏற்படாது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளும் மனமும் இதயமும் அறிவொழுக்கமும் இன்னும் பெரிதாக இல்லையென்பதே கொடுமையானது. "
எல்லோருக்கும் அறிவும் இதயமும் சேர்ந்திருக்கவேணும்" என்று சொல்வார் ஒரு நண்பர். " அதுவுமில்லாது விட்டால் அறிவாவது இருக்க வேண்டும். இல்லையென்றால் மனச்சாட்சியாவது இருக்க வேணும். இது எதுவும் இல்லாமற்தான் இன்று சூழல் இப்படிக் கெட்டுக் கிடக்கிறது " என்று சொல்வார் அவர்.
அதிகாரம் மிகப் பெரும் சவாலாக மனிதனைச் சூழ்ந்திருக்கிறது. மனிதன் மீPளமுடியாத சவாலாக அது பல ரூபங்களிலும் அரூபங்களிலும் விருத்தியுற்றுக் கொண்டேயிருக்கிறது. அழிவேயில்லாத மிகப் பெரிய சவால் அது. நுட்;பங்களும் தந்திரங்களும் பொறிகளும் குரூரங்களும் நிரம்பிக்கிடக்கும் பெரும் சவால்.மனிதனி;ன் எல்லாப்படைப்புகளும் எண்ணங்களும் அதிகாரத்தை நோக்கியதாகவும் அதிகாரத்தை எதிர்ப்பதாகவும் அல்லது அதை மறுப்பதாகவுமே இருக்கிறது. ஒரு பக்கம் அதிகாரத்தின் திரட்சிக்காக மனித ஆற்றல் முழுதும் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் அப்படித்திரண்ட அதிகாரம் மனித வாழ்வுக்கு எதிராக இயங்குகிறது என மீண்டும் அந்த அதிகாரத்துக்கெதிராக மனித ஆற்றல் முழுவதும் திரட்டப்படுகிறது. இப்படியே மனித அவலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதிகாரத்தின் நிழல்படியாத வாழ்க்கையில்லை. அதிகாரத்தின் குருதியோடாத இதயங்களில்லை. ஆளுக்காளிடம் வடிவங்களிலும் அளவுகளிலும் அது மாறுபடலாம். அல்லது வேறுபடலாம். ஆனால் தன்மையிலும் அடிப்படையிலும் அது ஒன்றுதான். அதிகாரம் ஒரு போதை. மிகப் பெரியபோதை. தீராப்போதை. மனிதனின் மிகப்பெரிய ருசியான பண்டமே அதிகாரம்தான். அது போதையூட்டும் ருசி. ருசி தரும் போதை. அந்த ருசி பிடிபடப்பிடிபட அது தீராத்தாகத்தை அளித்தபடியேயிருக்கிறது. அதிகாரத்தின் வேர்முடிச்சுகளில் நிம்மதியின்மை கிளைக்கிறது. மனிதனை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய பிரம்பாக அது சதா மனிதகுலத்தை மிரட்டிக்கொண்டேயிருக்கிறது. மிகநுண்ணிய வடிவங்களிலும் வகைகளிலும் மாபெரும் வலைப்பின்னலாக அது வாழ்வைச்சுற்றியிருக்கிறது. அதற்கு எண்ணற்ற நுட்பங்கள் உருவாகிவிட்டன. இதுவரையில் மனித குலம் தன் ஆற்றலை அதிகாரத்தின் நுட்பங்கள் குறித்தே அதிகளவில் செலவளித்திருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அதிகூடிய நுட்பமுடைய கருவியும்; அதிகாரம்தான். அதேபோல மனித உழைப்பின் பெரும்பகுதியும் அதிகாரத்துக்கும் அதிகாரத்துக்கெதிரான முயற்சிகளுக்குமாகவே செலவளிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவரிடம் உள்ள அதிகாரம் பிரயோகிக்க முடியாமற்போகிறது. இன்னொருவர் அதையும் சுவீகரித்துக்கொண்டு பலமான நிலையில் பெருக்கிறார். அப்படிப் பெருக்கும்போது வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. இங்கேதான் சிதைக்கப்படும் வாழ்வைக்குறித்து படைப்பியக்கம் நிகழ்கிறது. இந்தப்படைப்பியக்கம் அதிகாரத்துக்கு எதிரானவாழ்வியக்கமாக வாழ்வை நசிக்கும் அத்தனை குரூரங்களுக்கும் எதிரானதாக தொழிற்படுகிறது. ஆனால் பொதுத்தளத்தில் மாற்று அதிகாரம் குறித்த சிந்தனை இன்று பின்னகர்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது. வணிகக்கலாச்சாரமும் உலகமயமாதலும் உருவாக்கியுள்ள இடைவெளியின்மை வாழ்க்கையை மீள்பரிசீலனை செய்யும் மனோநிலையையும் அவகாசத்தையும் இல்லாமற் செய்துவிட்டது. மறுபுறத்தில் அதிகாரத்துக்குப் பலியாகும் சனங்களின் தொகை பெருகிக் கொண்டேயிருக்கிறது. சனங்கள் விழிகளை இழக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய செவிகளையும் இழந்துபோகிறார்கள். பொதுவாகச் சொன்னால் புலன்களை இழந்துபோகிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த புலன்களையிழந்த மனிதர்களுக்காகவே இப்போது பெருவாரியான ஊடகங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. புலன்களுக்காகவும் புலன்திறப்புக்காகவும் இயங்கவேண்டிய ஊடகங்கள் புலன்களை அடைக்கும் முரண்நிலை பெருகிய யதார்த்தம் இது. அதிகாரத்தைப் பரப்பும் அதைப் பிரயோகிக்கும் நுண்ணரசியலின் வடிவப் பெருக்கில் இன்று ஊடகங்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்தளவுக்கு மாற்றதிகாரத்துக்கான அறிவுப்பலமும் நுட்பமும் விழிப்பும் ஊடகப்பயன் பாடும் இல்லை. இதெல்லாம் அகிலனுக்கும் பிரச்சினையாக இருக்கின்றன. உறவுகளுக்கிடையில் பெருகியிருக்கும் அதிகாரம் பொய்முகங்களையும் நெருக்கடிகளையும் உற்பத்தி செய்தபடியே யிருக்கின்றது.
அதிகார மனோநிலை எதையும் சந்தேகிக்கிறது. எதையும் தன்னுடைய கோணத்திலிருந்தே பார்க்க முற்படுகிறது. அதனால் எல்லாவற்றிலும் அதிகளவுpல் தவறுகள் நிகழ்கின்றன. அதாவது தவறான புரிதல்களும் அச்சங்களும் ஏற்படுகின்றன. உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்றது. தேவையில்லாதது. வாழ்;க்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரானது. அதிகாரத்துக்கெதிரான கவிதைகளைச்சமகாலத்தில் தீவிரமாக எழுதியவர் எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகர். அவருடைய கவிதைகள் அதிகாரத்தின் குரூர முகத்தை கடுமையாக எதிர்த்தன. அதிகாரத்தின் நுட்பத்தையும் அதன் பொறிகளையும் எஸ்போஸ் தன்னாற்றல் முழுவதையும் திரட்டி எதிர்த்தார். ஆனால் அந்த அதிகாரம் அவரை ஏதோ ஒரு வடிவத்தில் பலியெடுத்து விட்;;டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் எஸ்போஸ் சொல்லி வந்த அதிகாரம் அவர் எதிர்பார்த்ததைப் போல அவரைக் கொன்று விட்டது. அவர் தன்னுடைய குழந்தைகளின் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமகால வாழ்வின் நிலைமைகளோடு இதை இணைத்து அகிலன் எழுதுகிறார் இப்படி
…பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத்தின்று கொழுத்தன
தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படை வீரர்
விழிகளைச் சூறையாடினர்
……..
…….
என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடு நிசியில்
வீரிட்டுப் பறக்கும்
ஒரு பறவை
மனிதனின் அத்தனை மாண்புகளையும் அதிகாரம் என்ற இந்தக்கரும்புள்ளி பெருநோயாகி அழித்துக் கொண்டேயிருக்கிறது. மனிதன் தன் வரலாற்றில் இந்தப்பூமியை அதிகளவில் சுவீகரித்திருக்கிறான். உண்மையில் அப்படிச் சுவீகாரம் பண்ணும் அதிகாரமோ உரிமையோ மனிதனுக்கில்லை. இந்தப்பூமியில் மனிதனும் ஒரு பிராணியே. ஏனைய பிராணிகளுக்கிருக்கும் இயற்கையின் உரிமைதானே மனிதனுக்கும் உண்டு. ஆனால் இந்த உண்மையை மனிதன் விட்டுவிட்டு தன்னுடைய அதிகார வெறிக்காக இதுவரையில் பூமியின் பெருவாரியான வளங்களை அழித்திருக்கிறான். மனித உழைப்பின் பெரும்பகுதியைச் சிதைத்திருக்கிறான். உண்மையில் இந்தப்பூமியின் மிகப்பெரிய எதிரி மனிதனே. தன்னுடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் பண்புக்கும் அவன் உருவாக்கிய அறத்துக்கும் நீதிக்கும் அவனே எதிரி.
இந்தப்பிரச்சினைகள் பொதுவாக எந்தப்படைப்பாளியையும் நிம்மதியாக இருக்;க விடுவதில்லை. அதிகாரத்தின் வௌ;வேறுவிதமான பொறிகளால் கணமும் நிம்மதியற்றுத்தவிக்கும் அந்தர நிலையின் வலியை உணரும் நிலையையிட்ட வருத்தம் அகிலனையும் அலைக்கிறது.
அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்;
நிரம்பிக்கிடக்கிறது வழிமுழுதும்;
(அடுத்து வரும் கணங்கள்)
உறவுகளுக்குள்ளும் மின்னலைகளாக அதிகாரமே ஊடுருவியிருக்கும்போது அன்பு பாசம் இரக்கம் நேசம் எல்லாமே பொய்யாகி விடுகின்றன. இதனால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நலன் சார்ந்தே எல்லாம் நிர்ணயம் செய்யப்படுகிறது. நலனின் அடிப்படையிலேயே இணக்கமும் இணக்கமின்;மையும் நிகழ்கிறது. அகிலன் இந்த நுண்வலைப்பின்னலை கண்டு அதிர்ந்துள்;ளார்.
பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு மூலையில்
சிக்கிக் கொண்டது
திருப்தியும் அன்பும்;
(தவறி வீழ்ந்த முடிச்சு)
இந்த நிலையில் மெய்யன்புக்கும் உறவுக்கும் இடமில்லை. உண்மையான அர்த்தத்தில் இதெல்லாம் உணரப்படுவதுமில்லை. அதனால் அவை உரிய முறையில் பொருட்படுத்தப்படுவதுமில்லை. உறவு அன்பினாலும் கருணையினாலும் எதிர்பார்ப்புகளுக்கப்பாலான நெருக்;கத்தினாலுமே உருவாகிறது என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்குள்ளாகிறது.
பதிலாக அது நலன்சார்ந்து. தேவைகளின் அடிப்படையில் பராமரிக்கப்படுகிறது என்பதைக்காணும்போது அதற்கப்பால் சிந்திக்கும் மனம் படுகின்ற துயரம் சாதாரணமானதல்ல.
இது அன்புக்கு எதிரானது. கருணைக்கும் உண்மைக்கும் மாறானது. பரஸ்பரம் என்பதற்கும் பற்றற்றது என்பதற்கும் இதில் இடமில்லை.
அன்பு என்பதன் பொருள் சிதையும் போது அதன் மெய்ப்பொருள் தேடும் மனம் அவலத்தில் வீழ்கிறது. இப்படி வீழ்ந்த மனங்களில் ஒன்று அகிலனுடையது. அன்பினால் இழைக்கப்படுவது உறவு என எதிர்பார்க்கும்மனதில் எழும் காயஙங்களை அகிலன் தன் கவிதைகளில் வலியெழும்பக்காண்பிக்கிறார்.
எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்
(துயரின் தொடக்கம்)
அகிலனுக்கு எல்லாமே துயரமயமாக இருக்கிறது. உண்மையற்;ற தனம் பெருகும் போது இப்படி புன்னகையும் துயரின் தொடக்கமாகவே இருக்கும் என அவர் உணர்கிறார். தன்னைப்புரிந்து கொள்ளத்தவறும் மனிதர்களை நோக்கி அகிலன் பேச முனைகிறார். புரிந்துகொள்ளத்தவறுவது வேறு. புரிந்து கொள்ள மறுப்பது வேறு. இரண்டு அனுபவங்களும் அகிலனை வருத்துகின்றன.
நமது வாழ்வில் அநேக தருணங்களில் நாம் பலதையும் புரிந்து கொள்ளத்தவறி விடுகிறோம். அதேபோலவே பல சந்தர்ப்பங்களிலும் மனிதர்களையும் மனித நடத்தைகளையும் விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இது இடைவெளிகளை உருவாக்குகிறது. பின்னர் இந்த இடைவெளிகளை நிர்பபமுடியாமலும் கடக்கமுடியாமலும் திணறுகிறோம். அகிலன் இந்த அந்தரிப்பையும் இந்த மூடத்தனத்தையும் கோபத்தோடும் துயரத்தோடும் பரிகாசத்தோடும் சொல்கிறார்.
என் மரணத்தின் போது
நீ ஒரு உருக்கமான
இரங்கற் கவிதையளிக்கலாம்
ஏன் ஒரு துளி
கண்ணீர் கூட உதிர்க்கலாம்
என் கல்லறையின் வாசகம்
உன்னுடையதாயிருக்கலாம்
அதைப் பூக்களால்
நீ நிறைக்கலாம்
நீ என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேநீரோ
வரும்பொளர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்எண்ணங்கள் கிடையாது
(எதிர்பார்ப்பு)
உளவியற் சிதைவுகள் ஏற்படுவதன் அடிப்படையே பெரும்பாலும் புரிந்துணர்வின் வீழ்ச்சியே. அகிலனின் காதற்கவிதைகளின் மையமும்கூட புரிந்து கொள்ளலின் நெருக்கடிகளைப்பற்றியவையே. அல்லது புரிந்து கொள்ளலில் உள்ள குழப்பமே. அவருடைய பெரும்பாலான கவிதைகளில் தொனிக்கிற கேவல், துயர்க்குரல் என்பது ஏதோ ஒரு வகையில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மையின் வீழ்ச்சியே.
யாரோடும் பகிர முடியாதுபோன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத் தெரியும்
என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை
..........
..........
அழுவதற்கான
வெட்கங்கள்
ஏதுமற்றுதுளிக்கும்
என் கண்கள்
(சுயம்)
இந்தப்புரிந்துணர்வின்மை என்பது மனிதனின் எல்லா ஆற்றலையும் சிதைக்கும் பெருங்கண்ணியாக இருக்கிறது. அதிகாரத்தைப்போலவே இதுவும் எதிர் அம்சங்கள் நிறைந்தது. எனவே இந்த அடிப்படையைச் சீர்செய்யாதவரையில் மனித முயற்சிகளும் ஆளுமையும் பொருளற்றே போகின்றன.
மனித குலம் திரட்டிய ஆற்றலுக்கு எதிராக புரிந்துணர்வின்மையின் எதிர்மறைவிளைவுகள் பெருகிக்கொண்டேயிருப்பதால்தான் இவ்வளவு இடர்ப்பாடுகளும் பூமியில் நிரம்பிக்கிடக்கின்றன என்று அகிலன் உணர்த்துகிறார். புரிதலை அதன் மெய்ப்பொருளில் சாத்தியப்படுத்தாதவரையில் எந்த உன்னதங்களும் சாத்தியமில்லை என்கிறார் அகிலன்.
அகிலனின் கவிதை மொழி தீவிரமானது. நவீன கவிதை பெற்றுவருகின்ற புதிய தொனியில் அவர் தன்னுடைய உணர்வுகளை பதிவு செய்கிறார். இந்தப்பதிவு ஒரு வகையான உரையாடல்தான். ஆனால் முறையீடற்ற உரையாடல்.
நேரடியாகச் சொல்லும் முறையில் எண்ணற்ற நேர், நேர் மறை அம்சங்களை காண்;பிக்கும் நுட்பத்தை தன்னுடைய கவிதை முறையாக்கிருக்கிறார் அகிலன். இது மென்மொழி. துயர்நிறை மொழி. யதார்த்த உலகத்தின் இடர்ப்பாடுகளை சொல்வதற்கான எளிய மொழி.
வாழ்வின் மீதான ஈடுபாடும் இளவயதின் தாபங்களும் எதிர்பார்ப்புகளும் அகிலனை வதைக்கின்றன. இயல்பற்ற சூழல் எல்லாவற்றையும் சிதைக்கிறது என்ற வருத்தம் அவரை அவருக்குத் தெரிந்த வகையில் பேச வைக்கிறது.
இதில் சில கவிதைகள் சொரிந்த தன்மையோடிருக்கின்றன. இவை ஆரம்ப நிலைக்கவிதைகளாகவும் இருக்கலாம். குறிப்பாக சில காதற் கவிதைகள். காதற்துயரைச் சொல்லும் கவிதைகளை விடவும் காதலின் ஏக்கத்தையும் அன்பிழைதலையும் சொல்லும் கவிதைகளில் மொழியின் அமைப்பும் உணர்வாழமும் குறைவாகவேயிருக்கின்றன. அதேபோல சில அரசியற் கவிதைகள். சுலொகத்தன்மைக்கு கிட்டவாக நிற்கின்றன அவை. அதாவது அகிலனின் கவிதை மொழிக்கு மாறானவையாகவும் விலகியும் தெரிகின்றன.
குரூரமாகப்பிளந்தெறியும் அரசியலை, அதன் அடக்குமுறைப்பயங்கரவாதத்தை அகிலன் வெறுக்கிறார். அவர் தன்னுடைய 'கனவுகளைத்தின்னும் இரவுகள் ' என்ற கவிதையில் சொல்கிறார்
நீள இரவின்
பெரு மூச்சு
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது
….
பெரும் ஊழியாய்.
என்று.இவையெல்லாம் நம் வாழ்வைச் சுற்றிய யதார்த்தங்கள் என்பதை உணர்த்துவதே அகிலனுடைய அக்கறை. இந்த அக்கறைதான் அகிலனின் மீது வாசகருக்கு ஏற்படுகிற கவனம். அவருடைய கவிதைகளின் மீது ஏற்படுகிற கவனமும்.

Subscribe to:
Posts (Atom)